நெல் சந்தைப்படுத்தல் சபை: நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு இல்லை

நெல்லைக் கொள்வனவு செய்வதில்நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நிதிப் பற்றாக்குறை கிடையாது என்று விவசாய அமைச்சுதெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் இவ்வாறான பிரச்சினை இருந்து வந்தது. தற்போது அவை தீர்க்கப்பட்டுள்ளன. ஆகக்கூடிய விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் ஆற்றல் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு உண்டு என்று விவசாய அமைச்சுதெரிவித்துள்ளது.

அனைத்து நிறுவகங்களையும் கணக்காய்வுக்கு உட்படுத்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு உட்பட்ட அனைத்து நிறுவகங்களும் கணக்காய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.. அமைச்சிற்கு உட்பட்ட நிறுவகங்களின் செலவுவிபரங்களை முகாமைத்துவத்திற்காக இன்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையைவிடுத்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

2021-2022 கல்வி ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும். 2021-2022 கல்வியாண்டிற்காக 42 ஆயிரத்து 519 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக பிரவேசத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மாணவர் கைநூல் தற்போது நூல் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட விற்பனை முகவர்களின் பெயர் பட்டியல் மும்மொழிகளிலும் இன்றைய  … Read more

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை வெற்றி  

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய வுழற்சியில் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் … Read more

இடியுடன் கூடிய மழை – 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.  2022 செப்டம்பர்04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 செப்டம்பர்04ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில்50 மி.மீ க்கும்அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி  எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகஸ்ட் மாதத்தில் பாரிய வீழ்ச்சி

கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 37, 760 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 20 வீத வீழ்ச்சியைக் காட்டுகின்றது. கடந்த ஜூலை மாதம் 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளில் ஐக்கிய இராச்சியம், இந்தியா, ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே முதல் மூன்று … Read more

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது – புதிய விலை விபரங்கள் வெளியாகின

தொலைபேசி கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நிலையான தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. டொலரின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செயற்பாட்டுச் செலவுகள் மேலும் அதிகரிப்பதன் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கையின் பிரதான தொலைபேசி சேவை வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, இலங்கை … Read more