உயர் தர பரீட்சையை எதிர்வரும் நவம்பரில் நடத்த திட்டம்
கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைவாக ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பல்வேறு அமர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறினார். இந்த அமர்வுகள் கணிதம், அறிவியல், வணிகம் மற்றும் கலை ஆசிரியர்களுக்காக 17 பல்கலைக்கழகங்களை தொடர்புபடுத்தி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மேலும் தெரிவித்தார்.