அடுத்த மாதம் உயர்தரப் பரீட்சை பெறுபேறு 

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த மாதம் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உயர் தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதியில் இருந்து மார்ச் மாதம் ஐந்தாம் திகதிவரை இடம்பெற்றது. 2 லட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு இன்றில் இருந்து ஒருவார காலம் விடுமுறை

நாட்டிவுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை தொடர்பில் ஆராய்ந்த பின்னர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் … Read more

எரிபொருள் நெருக்கடிக்கு நான் பொறுப்பல்ல – மணிவண்ணன்

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை சீர்குலைத்தது யார்? என்ற தலைப்பில் அண்மையில் வெளியான செய்தியை சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸின் தலைவர் ஆர்.எம்.மணிவண்ணன் மறுத்துள்ளார். குறித்த செய்தி தவறானது என்றும், எனவே அந்தக் கட்டுரையில் உள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல வர்த்தகர் ஆர்.எம்.மணிவண்ணன் மீது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவறுதலாக நம்பிக்கை வைத்ததன் காரணமாகவே எரிபொருள் நெருக்கடியை தீர்க்க முடியவில்லை என ஸ்ரீலங்கா மிரர் அண்மையில் … Read more

சமூக ஊடகங்களில் எரிபொருளை தேடும் இலங்கை மக்கள்

தட்டுப்பாடு காரணமாக மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் எரிபொருளைக் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். சிலர் சமூக ஊடகங்களில் எரிபொருளுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதை காணலாம். ஒரு லிட்டரின் விலையை பொருட்படுத்தாமல் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வைத்தியசாலைக்கு சென்றவர்கள், வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர்கள் என பலர் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராட்டமே சிறந்த வழி (PHOTOS)

நுவரெலியா- இராகலை நடுக்கணக்கு நகரில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கப் போராட்டமே சிறந்த வழியென மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வீதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  இப் போராட்டம் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.  மக்கள் போராட்ட மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தை முன்னிலை சோஷலிசக் கட்சி மற்றும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் தலைமை தாங்கி நடத்தினர். கோட்டாபய உருவ பொம்மையை தூக்கில் ஏற்றிய மக்கள்(Video)  நாட்டில் தொடரும் … Read more

பதவி விலகுவதை தவிற வேறு வழியில்லை – ஜனாதிபதி, பிரதமரிடம் சஜித் கோரிக்கை

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். தலைமைத்துவத்தை வழங்க தயார் “இன்று மனித உயிர்கள் ஆபத்தில் உள்ளன. நாட்டை அழித்து இந்த நாட்டு மக்களை … Read more

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் கனமழை: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 179

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதினால் . பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடரால் அம்மாநிலத்தின் 23 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 22 இலட்சம் பேர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீதி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.. பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. வெள்ளப்பெருக்கு காரணமாக … Read more

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் அடைமழை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அடைமழை பெய்து வருவதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்னியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறியுள்ளனர். வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தீவிரமடையலாமென அவுஸ்திரேலிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அனர்த்த நிலை மேலும் உக்கிரமடையுமிடத்து மக்கள் குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நாளை என்ன நடக்கும்..! அச்சத்தில் இலங்கை மக்கள்

Courtesy: வி.தேவராஜ் சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட இலங்கை இப்போது லெபனான் பாணியில் பயணிக்கின்றது. மக்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுக்கு தடைக் கல் ராஜபக்சர்கள் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது குறித்த அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். … Read more