இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்

தென்னிலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இலங்கையின் சுற்றுத்துறைக்கு பெரும் சவால் நிலை ஏற்பட்டுள்ளது. காலி சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் குழுவொன்றுக்கு பொலிஸார் எரிபொருள் வழங்க மறுத்தமை தொடர்பில் இலங்கை சுற்றுலா சபை, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சிறு … Read more

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் சமூகம் அழுத்தம் – வெளியாகியுள்ள தகவல்

வடக்கில் இருந்து 16 இராணுவப் படையணிகளை மீளப் பெறுவதற்கு புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தின் மீது செலுத்திய செல்வாக்கு அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலோபாய மையங்களில் நிலைகொண்டுள்ள இந்தப் படையணிகளை பராமரிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிப்பதாக புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அறிவித்துள்ளனர். 373 பில்லியன் ரூபா ஒதுக்கீடு அதேபோன்று, இந்தப் படையணிகளை பராமரிப்பதன் காரணமாக அரசாங்கத்தின் டொலர் … Read more

இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையுடன் இந்த ஆர்வம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலாவதியான கடவுச்சீட்டும் புதுப்பிப்பு இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யாத பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான புதிய விண்ணப்பங்களை செய்து வருவதுடன், கடவுச்சீட்டு காலாவதியானவர்களும் அவற்றை புதுப்பித்து வருகின்றனர். இராஜதந்திர கடவுச்சீட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மற்றும் … Read more

வெளிநாடொன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையரொருவர் கைது

டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையரொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை டுபாயிலிருந்து விமானம் மூலம் நாட்டை வந்த குறித்த நபரிடமிருந்து 16 தங்கப் பாளங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 35 … Read more

அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை – பணம் அனுப்புவதை தவிர்க்கும் அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்கள்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதியை அனுப்புவதைத் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் அனுப்பும் பணத்தை அரசாங்கம் திருடிவிடும் என்பதால் பணம் தேவைப்படுபவர்களின் கைகளில் ஒருபோதும் சேராது என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். நெருக்கடியை தொற்றுநோய்க்கு அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது, எனினும், பொருளாதார வல்லுநர்கள் தவறான நிதி கையாளுகை காரணமாகவே நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை … Read more

நெருக்கடியால் திணறும் இலங்கை! காலம் கடந்த முறைகளால் நாட்டில் பிரச்சினையை தீர்க்க முடியாது: குவைத் தூதுவர் தகவல்

தாகத்திற்கு தண்ணீர் கோப்பையை வழங்கும் விதத்தில் காலம் கடந்த முறைமைகள் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாஃப் எம்.எம்.பு தாஹிர் (Khalaf M. M. Bu Dhhair) தெரிவித்துள்ளார். குவைத் அரசின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அஷபா மகா வித்தியாலயத்தின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையில் 100 ஆண்டுக்கும் மேலான வரலாறு குவைத்திற்கும் இலங்கைக்கும் … Read more

திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை

எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச்சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைவாக மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலங்கள் மூலம் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.  இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று (02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வுருமாறு:  

இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு  விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   100 விண்ணப்பதாரர்களுக்கு சேவை இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் 2022 ஜூலை 04 திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் விமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக, ஒரு நாள் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒரு நாள் … Read more