பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம்
சினிமா இந்தியாவிற்கு அறிமுகமான புதிதில் புராண கதைகள் சினிமா ஆனது. அதன்பிறகு அதன் அடுத்த கட்டமாக சமூக கதைகள் படமானது. அப்போது சமூக சீர்திருத்த கதைகளை கொண்ட படங்கள் வெளியானது. சுதந்திர போராட்ட காலத்தில் தேசப்பற்றை வலியுறுத்திய படங்கள் வந்தது. 'பொலிட்டிகல் சட்டையர்' என்று அழைக்கப்படும் முதல் அரசியல் நையாண்டி படம் 'முகமது பின் துக்ளக்'. அப்போது சினிமாவிலும், நாடகத்திலும் காமெடி நடிகராக இருந்த சோ தான் நடத்தி வந்த மேடை நாடகத்தை அப்படியே படமாக இயக்கினார். … Read more