கிராமி விருது வென்ற 'ஷக்தி' குழுவுக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து
இசைத்துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் கிராமி விருதுகள் உலக அளவில் உள்ள இசைக்கலைஞர்களாலும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் 'சிறந்த குளோபல் இசை ஆல்பம்' விருதை இந்திய இசைக்குழுவான ஷக்தி வெளியிட்ட 'திஸ் மொமென்ட்' என்ற ஆல்பத்திற்குக் கிடைத்தது. அந்த ஆல்பத்திற்கு இசை அமைத்த குழுவிற்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தியாவிற்கு கிராமி விருதுகள் மழையாய் பொழிந்துள்ளது. கிராமி வின்னர்ஸ், மூன்றாவது முறை … Read more