Thalapathy 68: டபுள் சைட் கேம் ஆடும் வெங்கட் பிரபு..? தளபதி 68க்கு முன்பே இன்னொரு ஹீரோவுடன் டீல்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது 68வது படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்கு கொடுத்துள்ளார் விஜய். இப்படத்தின் அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படம் இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டபுள் சைட் கேம் ஆடும் வெங்கட் பிரபு: பீஸ்ட், வாரிசு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் விஜய், தற்போது … Read more

Ajith: போடு வெடிய.. 'விடாமுயற்சி' படம் குறித்து வெளியாகியுள்ள நல்ல சேதி.!

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் எப்போது துவங்கு என நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்து வருகின்றனர். கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஏகே 62’ படத்தின் விடாமுயற்சி என்ற டைட்டிலை வெளியிட்டனர். இதனையடுத்து படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் கப்சிப் என உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் ரொம்பவே கவலையில் உள்ளனர். இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த பொங்கல் வெளியீடாக ‘துணிவு’ ரிலீசானது. எச். … Read more

பெரிய நடிகர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ்

தனியார் ஓடிடி தளம் ஒன்று நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மனம்விட்டு பல விஷங்களை பேசியுள்ளார். “நான் சோலோ ஹீரோயினாக பல படங்களில் நடித்து வெற்றி பெற்றதால் பெரிய ஹீரோக்கள் என்னை புறக்கணிக்கிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை, எனக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியிருப்பதாவது: நான் திரைப்படத் துறை தொடர்பில்லாத பின்னணியில் இருந்து வருகிறேன். என் தந்தை சினிமாவில் இருந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நான் எட்டு வயதில் அவரை … Read more

Parvathy Nair: மொத்த அழகும் இங்க தான் இருக்கு போல.. பார்வதி நாயரின் ஹாட் போட்டோஸ்!

சென்னை: நடிகை பார்வதி நாயரின் கவர்ச்சி போட்டோவை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர். அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அடுத்ததாக பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். அடுத்தடுத்த படங்களில்: அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . … Read more

Maamannan: 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூல்: 'மாமன்னன்' வெற்றி விழாவில் உதயநிதி.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது ‘மாமன்னன்’ படம். வசூல் மற்றும் விமர்சனரீதியாக அமோக வரவேற்பினை பெற்று வரும் இந்தப்படம் பிரபலங்களின் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி பக்ரீத் வெளியீடாக … Read more

ஆங்கில உளவாளியாக நடிக்கும் என்டிஆர் பேரன்

'அமிகோஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு என்.டி.ராமராவ் பேரன் நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்திற்கு 'டெவில்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நவீன் மேதாராம் இயக்கத்தில் தயாராகும் படத்தில் சம்யுக்தா மேனன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் எழுதியிருக்க, எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். அபிஷேக் பிக்சர்ஸ் சார்பில் அபிஷேக் நாமா தயாரிக்கிறார். இந்த படம் பீரியட் படமாக உருவாகிறது. இதில் நந்தமுரி கல்யாண்ராம் ஆங்கில அரசின் உளவாளியாக நடிக்கிறார். … Read more

தமன்னாவின் காவாலா வைப்… ஒரிஜினலை விட இது சூப்பர்… ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலுக்கு வேறு விதமாக ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

Simbu: 'எஸ் டி ஆர் 48' படத்திற்காக சிம்பு செய்யப்போகும் காரியம்: இதை சத்தியமா எதிர்பார்க்கல..!

சிம்பு நடிப்பில் தற்போது ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகி வருகிறது. மாநாடு படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதனையடுத்து ‘மாநாடு’ படத்தின் … Read more

தமிழ் சினிமாவுக்கு வரும் இன்னொரு ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாக்களுக்கு பஞ்சமே இல்லை. ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லட்சுமி மகள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா நாயர், ஐஸ்வர்யா தத்தா, இப்படி நிறைய உள்ளனர். கூடுதலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக உள்ளார். இந்த நிலையில் புதிதாக வந்திருக்கிறார் டாலி ஐஸ்வர்யா. மாடலிங் துறையில் 8 வருட அனுபவம் கொண்ட இவர் 'கலைஞர் நகர்' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்த படம் 23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட சாதனை படம். சுகன் குமார் இயக்கி … Read more

Sivakarthikeyan Salary: வேற வழியே இல்ல… மாவீரனுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் அடுத்த வாரம் 14ம் தேதி ரிலீஸாகிறது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன். இதனால், மாவீரன் படத்துக்காக தனது சம்பளத்தை ரொம்பவே குறைத்துவிட்டாராம். மாவீரனுக்காக சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்:கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை மடோன் அஸ்வின் … Read more