பொன்னியின் செல்வனில் நடித்தது உண்மைதான்: விஜய் யேசுதாஸ்

பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் பாடகர்தான் என்றாலும் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தில் 'அவன்' என்ற படத்தில் அறிமுகமானவர், தமிழில் 'மாரி' படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த 'சல்மான்' என்ற 3டி படம் வெளிவந்தது. இது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.இந்த நிலையில் விஜய் யேசுதாஸ் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டடது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விஜய் யேசுதாஸ் … Read more

Bigg Boss: பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ ரெடி… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் கமல்ஹாசன்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது பிக் பாஸ். இதுவரை 6 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான 7வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. பிக் பாஸ் 7வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிக் பாஸ் 7வது சீசனுக்கான ப்ரோமோ ஷூட்டிங் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ ரெடி:விஜய் டிவியின் டீஆர்பி கன்டெய்னரான பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 6 சீசன்களை … Read more

விஜய் சேதுபதி 50வது படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது

நடிகர் விஜய் சேதுபதி இப்போது தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குரங்கு பொம்மை பட இயக்குநர் நிதிலன் இயக்குகிறார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு மகா ராஜா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் … Read more

Leo 𝐒hoot Wrapped: சைலண்டாக முடிந்த லியோ ஷூட்டிங்… தீபாவளிக்கு காத்திருக்கும் மெகா ட்ரீட்

சென்னை: கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய லியோ ஷூட்டிங், காஷ்மீர், சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ ஷூட்டிங் நிறைவு விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ, அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் … Read more

சாய்தரம் தேஜ் உடன் இணையும் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே நடித்து கடைசியாகப் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் மகேஷ் பாபு நடிக்கும் குண்டூர் காரம் படத்தில் இருந்தும் பூஜா ஹெக்டே வெளியேறினார். இந்த நிலையில் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் நடிக்கவுள்ள படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதை சித்தரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். … Read more

Eeramaana Rojavae 2: காவ்யா குறித்து பேசி பிரியாவிடம் மாட்டும் ஜீவா.. க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் தொடர்ந்து சிறப்பான இடங்களை பிடித்து வருகிறது ஈரமான ரோஜாவே 2 சீரியல். கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடா டிஆர்பியிலும் முக்கியமான ரேட்டிங்கை பிடித்து வருகிறது. ஆனாலும் கல்யாணத்திற்கு முந்தைய காதலையே வைத்து தொடர்ந்து எபிசோட்கள் காணப்படுவது ரசிகர்களுக்கு சிறிது அயர்ச்சியை கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. காவ்யா குறித்து உற்சாகமாக பேசும் ஜீவா: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் ஈரமான ரோஜாவே 2 தொடரும் முக்கியமான இடத்தை … Read more

ராஜ்கமல் – லதா ராவ் தம்பதியினர் வீட்டில் திருட்டு

சீரியல் நடிகர்களான ராஜ்கமல் – லதா ராவ் தம்பதியினர் தங்களது சொந்த உழைப்பில் மதுரவாயலில் அருமையான பங்களா ஒன்றை கட்டியிருந்தனர். அந்த பங்களாவை சீரியல் மட்டும் விளம்பர பட ஷூட்டிங்கிற்கு வாடகையும் விட்டு வந்தனர். இந்நிலையில், அந்த பங்களாவின் பின் பக்கம் கதவின் பூட்டை உடைத்து சில கொள்ளையர்கள் டிவி, மோட்டார் உள்ளிட்ட சில பொருட்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே தெருவில் இருக்கும் பாஜக பிரமுகரின் வீட்டின் முன் நின்ற காரையும் மர்ம நபர்கள் திருடிச் … Read more

அது என்ன மேல் தட்டு.. கீழ் தட்டு.. மாரி செல்வராஜை மறைமுகமாக விளாசிய இமான் அண்ணாச்சி!

சென்னை: சன் டிவியில் பல ஆண்டுகள் “சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க” நிகழ்ச்சியை நடத்தி பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட இமான் அண்ணாச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில், புதிதாக படமொன்றில் நடித்துள்ள இமான் அண்ணாச்சி அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வைத்து படம் எடுத்தால் ஓடி விடுகிறது என்றும் … Read more

'ஜவான்' தமிழ் டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் மூன்று மொழிகளிலும் நேற்று வெளியானது. 24 மணி நேரத்தில் ஹிந்தி டிரைலர் 45 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஷாரூக்கான் நடித்து இதற்கு முன்பு வெளியான 'பதான்' படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. … Read more

மோசமான விமர்சனம்.. கீர்த்தி சுரேஷை ஓரங்கட்ட பார்த்தாங்க..பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் புரட்சிப் பெண்ணாக நடித்திருந்தார். விமர்சன … Read more