'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை விட்டு விலகிய மணிமேகலை

விஜய் டிவியில் நான்கு வருடங்களுக்கு முன்பு 2019ல் ஆரம்பிக்கப்பட்ட சமையல் நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. சமையலுடன் நகைச்சுவையும் கலந்து உருவாக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. சினிமா, டிவி பிரபலங்கள் 'குக்' ஆக கலந்து கொள்ள, நகைச்சுவை தெரிந்த சிலர் கோமாளிகளாக கலந்து கொண்டனர். தற்போது 4வது சீசன் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் சீசனிலிருந்து கோமாளிகளில் ஒருவராக மணிமேகலை இருந்து வந்தார். இந்த நான்காவது சீசனின் இரண்டாவது வாரத்திலிருந்துதான் மணிமேகலை … Read more

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் விஷ்வா!!

நடிகர் விஜய் விஷ்வா படப்பிடிப்பின் போது டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடித்ததால் விபத்தில் சிக்கினார். நடிகர் விஜய் விஷ்வா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கபட்டது. அப்போது பைக்கில் இருந்து குதிக்கும் போது கீழே விழுந்ததில் நடிகர் விஜய் விஷ்வாவின் வலது கை முறிந்தது. வலியால் துடித்த அவர் சேலம் ஐந்து ரோடு … Read more

Leo: லியோ படத்திற்காக தன் சம்பளத்தை பல மடங்கு குறைத்த த்ரிஷா…இதான் காரணமா ?

இந்திய சினிமாவே தற்போது விஜய்யின் லியோ படத்தை தான் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ். அதன் பின் அவரின் இயக்கத்தில் பல மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் தெரிவித்த நிலையில் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகின்றார் லோகேஷ். பொதுவாக இருக்கும் விஜய் படங்களின் எதிர்பார்ப்பை காட்டிலும் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. AK62: துரோகங்களால் மாறிய … Read more

குக் வித் கோமாளியில் ‛காந்தாரா' கெட்டப்பில் மிரட்டிய புகழ்!

குக் வித் கோமாளி சீசன் 4 அண்மையில் தொடங்கி வழக்கம் போல் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், வாரந்தோறும் ஏதாவது ஒரு கான்செப்ட்டில் கோமாளிகள் கெட்டப் போட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வார ஸ்பெஷலாக திரைப்படங்களில் பிரபலமான கதாபாத்திரங்களின் கெட்டப்புகளில் கோமாளிகள் வந்துள்ளனர். அதில், புகழ் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'காந்தாரா' படத்தின் பஞ்சுருளி கெட்டப்பில் வந்துள்ளார். பஞ்சுருளி போலவே மிரட்டலான பெர்பார்மென்ஸையும் தந்துள்ளார். இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வீஜே … Read more

Vijay: நான் விஜய்யின் தீவிர ரசிகர்..பிரபல நிகழ்ச்சியில் கெத்து காட்டிய சூடான் நாட்டை சேர்ந்த இளைஞர்..!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவர். கடந்த பத்து வருடங்களில் தன் படங்களின் மூலம் பல வசூல் சாதனையை செய்து இந்திய சினிமாவின் பார்வையை தமிழ் சினிமா மீது திருப்பினார் விஜய். என்னதான் விஜய்யின் படங்கள் சூப்பராக இருந்தாலும் சுமாராக இருந்தாலும் வசூலை பொறுத்தவரை தயாரிப்பாளர்களுக்கு லாபாரமான படங்களாகவே அமைந்துவிடும். உதாரணத்திற்கு கடைசியாக வெளியான விஜய்யின் படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதைத்தொடர்ந்து … Read more

வாரிசை ஓரங்கட்டிய வாத்தி.. எட்டு நாளில் இத்தனை கோடி வசூலா? அண்மைத் தகவல் இதோ!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் டோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்தான் SIR. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது. சமுத்திரகனி, சம்யுக்தா என பலரும் நடித்திருந்த இந்த படம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன? அதனை இளம் ஆசிரியராக வரும் தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதுமாகவே அமைந்திருக்கிறது வாத்தி பட கதை. … Read more

கஸ்டடியில் இருந்து நாகசைதன்யாவை ரிலீஸ் செய்த வெங்கட் பிரபு

தமிழின் முன்னணி நடிகர்கள் சிலர் தெலுங்கு பட இயக்குனர்களின் டைரக்ஷனில் நடிக்க விரும்புவது போல, இயக்குனர் வெங்கட் பிரபுவும் தெலுங்கில் இறங்கி அங்கேயும் தனது கொடியை நாட்ட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இளம் நடிகர் நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இந்த படத்திற்கு … Read more

ஆடுகளம் படத்தை பெருமைப்படுத்திய ராஜமவுலி

இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற மதிக்கப்படுகின்ற இயக்குனராக மாறியுள்ளார். கடந்த வருடம் இவரது இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தில் மரகதமணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடல் கோல்டன் குலோப் விருது பெற்றதுடன், ஆஸ்கார் விருதுக்கான … Read more

Leo Vijay: விஜய் சேதுபதியை காப்பியடிக்கும் விஜய்: 'கே. கே.'னு பேரு வாங்கிடுவாரு போலயே

Vijay, leo: அண்மை காலமாக விஜய் செய்து வரும் வேலைக்கு அவரை இனி தளபதி விஜய் என்பதற்கு பதில் கே.கே. விஜய் என சொல்லப் போகிறார்கள் என பேச்சு கிளம்பியிருக்கிறது. விஜய்விஜய்யின் பெயரை சொன்னாலே அவருடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், வேலை செய்து வருபவர்கள் சொல்லும் முதல் வார்த்தை சார் ரொம்ப அமைதியானவர் என்பது தான். அதிகமாக பேச மாட்டார். தன் ஷாட் முடிந்தாலும் கேரவனுக்கு செல்லாமல் ஸ்பாட்டில் இருந்து ஷூட்டிங்கை பார்ப்பார். அமைதியான ஆளாக இருந்தாலும் … Read more

அருமையான அயோக்கியன்! விக்ரமனை வைத்து அசீமை கடுப்பேற்றும் குரேஷி

பிக்பாஸ் டைட்டில் வின்னரான அசீம் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் பல்பு வாங்கி வருகிறார். அதிலும், எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றாரோ, அதே தொலைக்காட்சியிலேயே அசீமை கலாய்த்துள்ளனர். விஜய் டிவியின் காமெடி ஷோவான ஊ சொல்றியா? ஊஊ சொல்றியா? நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், தனலெட்சுமி ஆகிய இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அவரை வம்பிழுக்கும் குரேஷி அசீமை 'நீ அருமையான அயோக்கியன்' என முதலில் கிண்டலடிக்கிறார். அதற்கு கடுப்பாகி அசீம் குரேஷி அருகில் செல்ல மீண்டும் … Read more