"எனக்கு முன் பின் தெரியாத நபர். அது மோசமான அனுபவம்!"- சட்டக்கல்லூரி சம்பவம் குறித்து அபர்ணா பாலமுரளி
‘தங்கம்’ என்ற மலையாள சினிமா புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் மாணவர் சங்கத் திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த 18-ம் தேதி எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் நடந்தன. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் வினீத் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார். மேடையிலிருந்த நடிகை அபர்ணா பாலமுரளியை வரவேற்கும் விதமாகப் பூங்கொத்து கொடுத்த எல்.எல்.பி இரண்டாம் ஆண்டு மாணவர் விஷ்ணு என்பவர், அபர்ணாவின் அனுமதியின்றி கைகளைப் பிடித்து, தோளில் கை போட்டு செல்ஃபி எடுக்க முயன்றார். இந்த விவகாரம் விவாதமானதைத் … Read more