சிறிய பட்ஜெட்டில், வித்தியாசமான கதைக்களத்தில் கவனம் ஈர்த்த 6 தமிழ் படங்கள்! #2022Rewind

இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் எதிர்பாராதவிதமாக சர்ப்ரைஸ் ஹிட் அடித்தப் படங்கள் பற்றி பார்த்தோம். தற்போது சிறு பட்ஜெட்டுகளில் வித்தியாசமான கதைக்களத்தால் உருவாகி பார்வையாளர்களிடையே வரவேற்பு பெற்ற படங்கள் பற்றிப் பார்க்கலாம். 1. கார்கி சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘கார்கி’. கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஒரு சிறுமி அனுபவிக்கும் வேதனைகளும், காப்பாற்ற வேண்டிய இரு மகள்களின் தந்தையே குற்றத்தை செய்திருப்பதும், அதற்காக அவரது மகளே சட்டத்தின் முன் தண்டனை வாங்கித் தருவதுபோன்ற … Read more

மீண்டும் பனையூரில் ரசிகர்களை சந்தித்த விஜய்

விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் அப்படக்குழு பிரமோசன்களை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மீண்டும் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளிமாவட்டங்களில் மக்களிடம் … Read more

தியேட்டர் ரிலீசுக்காக அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்ட மோகன்லாலின் அலோன்

மோகன்லால் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியான படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடி தளம் என மாறிமாறி வெளியாகின. சில வாரங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில், புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானாலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள அலோன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதே சமயம் … Read more

இயக்குனர் குணசேகர் மகள் திருமண வரவேற்பு ; மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் பங்கேற்பு

தெலுங்கு திரையுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் குணசேகர். மகேஷ்பாபுவுக்கு ஒக்கடு படத்தின் மூலம் மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ அந்தஸ்தை பெற்றுத்தந்த இவர், தொடர்ந்து அவரை வைத்து சில வெற்றி படங்களை கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அல்லு அர்ஜுன், அனுஷ்கா, ராணா நடிப்பில் ருத்ரமாதேவி என்கிற படத்தை இயக்கினார். தற்போது சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் குணசேகர். இந்த நிலையில் இவரது மகள் நீலிமாவுக்கும் ரவி பிரக்யா என்பவருக்கும் திருமணம் … Read more

விஜயை இயக்கும் விஷால்? எப்போ தெரியுமா!

நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்படம் அடுத்த சில நாட்களில் வெளிவர உள்ள நிலையில், திருச்சி தெப்பக்குளம் எல்.ஏ சினிமாஸ் திரையரங்கில் இன்று நடிகர் விஷால் மற்றும் படகுழுவினர் வருகை தந்தனர். ரசிகர்களை சந்தித்து நடிகர் விஷால் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். இதில் ரசிகர்கள் பல்வேறு காரசாரமாக கேள்விகளுக்கு விஷால் அளித்த பதில்: உங்களின் அரசியல் வருகை எப்போது இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு ? நான் ஏற்கெனவே அரசியல்வாதியாக தான் உள்ளேன். நான் … Read more

'அவதார் 2' ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் வெளிவந்து உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்த ஹாலிவுட் படம் 'அவதார்'. அப்படத்தின் இரண்டாம் பாகம், 'அவதார் – த வே ஆப் வாட்டர்' இந்த வாரம் டிசம்பர் 16ம் தேதி இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் 'அவதார் 2' படத்தை வெளியிடுகின்றன. தமிழின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் அதிகாலை 4 மணி … Read more

தமிழ்ப் பக்கம் வருவாரா ஸ்ரீலீலா?

தெலுங்குத் திரையுலகத்தில் அவ்வப்போது சில புதிய நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து இப்போது ஸ்ரீலீலா என்ற புதிய நடிகை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் பிறந்த இந்தியர் ஸ்ரீலீலா. அதன் பிறகு பெங்களூருவில் வளர்ந்தவர். இந்த வருடம்தான் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து டாக்டர் ஆகியுள்ளார். தற்போதுள்ள நடிகைகளில் சாய் பல்லவி, ஐஸ்வர்ய லெட்சுமி ஆகியோர் டாக்டருக்குப் படித்து முடித்தவர்கள். ஷிவானி ராஜசேகர் டாக்டருக்குப் படித்து … Read more

நிர்வாகிகளுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்… கசிந்த தகவல்!!

நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார். சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசிய விஜய், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நவம்பர் மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை விஜய் சந்தித்தார். இந்த தொடர் சந்திப்புகள் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கு வித்திட்டுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள … Read more

Thunivu: அடுத்த அதிரடிக்கு தயாரான அஜித்: 'துணிவு' படத்தின் தாறுமாறு அப்டேட்.!

எச்.வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துணிவு’ பட ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ‘வலிமை’ படத்தினை போல் இல்லாமல் இந்தப்படம் முழுக்க முழுக்க வினோத் பாணியில் உருவாகியிருக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் மூலம் பிரபலமான எச்.வினோத் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். ‘பிங்க்’ படத்தின் அபிசியல் ரீமேக்கான இந்தப்படத்தை போனி கபூர் தயாரித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் மாபெரும் … Read more

‘வாரிசு vs துணிவு எது முதல்ல?; விஜய் உடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்’ – விஷால் ஓபன் டாக்

விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசை என்றும், ‘தளபதி 67’ படத்தில் நடிக்காததற்கான காரணம் என்னவென்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், திருச்சி எல்.ஏ. சினிமாஸ் திரையரங்கில் இன்று படத்தின் கதாநாயகன் நடிகர் விஷால் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் பட புரோமஷனுக்காக வந்திருந்தனர். அப்போது திரையரங்கில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய விஷால், “இலங்கை அகதிகள் முகாமில் என் … Read more