'அவதார் 2' ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் வெளிவந்து உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்த ஹாலிவுட் படம் 'அவதார்'. அப்படத்தின் இரண்டாம் பாகம், 'அவதார் – த வே ஆப் வாட்டர்' இந்த வாரம் டிசம்பர் 16ம் தேதி இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் 'அவதார் 2' படத்தை வெளியிடுகின்றன. தமிழின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் அதிகாலை 4 மணி … Read more

தமிழ்ப் பக்கம் வருவாரா ஸ்ரீலீலா?

தெலுங்குத் திரையுலகத்தில் அவ்வப்போது சில புதிய நடிகைகள் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து இப்போது ஸ்ரீலீலா என்ற புதிய நடிகை ஏற்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் பிறந்த இந்தியர் ஸ்ரீலீலா. அதன் பிறகு பெங்களூருவில் வளர்ந்தவர். இந்த வருடம்தான் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து டாக்டர் ஆகியுள்ளார். தற்போதுள்ள நடிகைகளில் சாய் பல்லவி, ஐஸ்வர்ய லெட்சுமி ஆகியோர் டாக்டருக்குப் படித்து முடித்தவர்கள். ஷிவானி ராஜசேகர் டாக்டருக்குப் படித்து … Read more

நிர்வாகிகளுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்… கசிந்த தகவல்!!

நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்தார். சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் பேசிய விஜய், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். நவம்பர் மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை விஜய் சந்தித்தார். இந்த தொடர் சந்திப்புகள் தற்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கு வித்திட்டுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள … Read more

Thunivu: அடுத்த அதிரடிக்கு தயாரான அஜித்: 'துணிவு' படத்தின் தாறுமாறு அப்டேட்.!

எச்.வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துணிவு’ பட ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ‘வலிமை’ படத்தினை போல் இல்லாமல் இந்தப்படம் முழுக்க முழுக்க வினோத் பாணியில் உருவாகியிருக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் மூலம் பிரபலமான எச்.வினோத் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். ‘பிங்க்’ படத்தின் அபிசியல் ரீமேக்கான இந்தப்படத்தை போனி கபூர் தயாரித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் மாபெரும் … Read more

‘வாரிசு vs துணிவு எது முதல்ல?; விஜய் உடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்’ – விஷால் ஓபன் டாக்

விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசை என்றும், ‘தளபதி 67’ படத்தில் நடிக்காததற்கான காரணம் என்னவென்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், திருச்சி எல்.ஏ. சினிமாஸ் திரையரங்கில் இன்று படத்தின் கதாநாயகன் நடிகர் விஷால் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் பட புரோமஷனுக்காக வந்திருந்தனர். அப்போது திரையரங்கில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய விஷால், “இலங்கை அகதிகள் முகாமில் என் … Read more

நான் என்ன மிருக காட்சி சாலை விலங்கா? – டாப்சி கோபம்

தமிழில் பிரபலமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகை டாப்சி. ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் போன்று துணிச்சலாக பேசக்கூடியவர். சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறவர். பொது இடங்களில் தன்னை துரத்தி துரத்தி படம் எடுப்பவர்களை கடுமையாக கண்டித்து வருகிறவர். ஒரு முறை புகைப்பட கலைஞர்களை நேரில் எச்சரித்து பரபரப்பு கிளப்பியவர். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடிக்க தொடங்கி … Read more

Thalapathy vijay: விஜய்யின் மாஸ்டர் பிளான்..விளாசி தள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர் நடிகர் விஜய். தற்போது வம்சியின் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகின்றது. இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் எளிமையாக நடந்து முடிந்த நிலையில் ஜனவரி மாதம் இப்படத்தின் படபிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

பிச்சைக்காரன் – 2 படக்குழுவைச் சேர்ந்த மூவர் கைது.. கேமிராக்கள் பறிமுதல் – நடந்தது என்ன?

‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்திற்காக அனுமதியின்றி உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலமாக படம்பிடித்த படக்குழுவினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தை சிலர் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிப்பதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அத்துமீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நவீன் குமார், சுரேஷ், ரூபேஷ் என்பதும், இவர்கள் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்து, … Read more

நான் சொன்னால் ரம்மி விளையாடி விடுவார்களா? – சரத்குமார் ஆதங்கம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்கிற சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்த நடிகர் சரத்குமார் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் பூரண மதுவிலக்கு கோரி சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சரத்குமார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஆன்லைன் … Read more