விவாகரத்து அறிவிப்பிற்கு பின் குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா: ரசிகர்கள் மகிழ்ச்சி..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டனர். அதில், நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் … Read more

‘தற்பொழுது உள்ள இயக்குநர்கள் தங்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்துகிறார்கள்” – அமீர்

தற்போது வரும் இயக்குநர்கள், திரைப்படங்களில் தங்களது சாதி, மதங்களை அடையாளப்படுத்துவதை விரும்புகின்றனர் என்று இயக்கு அமீர் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கதையை, இயக்குநர் அமீர் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்குகிறார். இதற்கான அறிமுக விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் சூரி நடிக்கிறார்.  இந்த விழாவில் பேசிய … Read more

இளம் நடிகைகளுக்கு 'டப்' கொடுக்கும் மீரா ஜாஸ்மின்

'ரன், சண்டக்கோழி' படங்கள் மூலம் '2 கே' ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். துறுதுறு, பரபரவென இருக்கும் அவரது நடிப்பும், பேச்சும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அவரது இடத்தை இதுவரையிலும் வேறு எந்த நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்பது உண்மை. தன்னுடைய இடம் மீண்டும் தனக்குத்தான் என்று சொல்லுமளவிற்கு சமூகவலைதளத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. 20 பிளஸ் நடிகைகள் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில் … Read more

இருபது நிமிடத்தில் அஜித்தின் சாதனையை முறியடித்த விஜய்..! இது வேற லெவல் பா..!

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திலிருந்து தற்போது அரபிக் குத்து பாடல் வெளியாகிவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் செம வைரலாகிவருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் அசத்தல் நடனத்தில் கலர்புல்லாக வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று 6 மணிக்கு வெளியான இப்பாடல் ஐந்து நிமிடத்திற்குள் 4 லட்சம் பார்வையாளர்களை பெற்றது. வெளியானது அரபிக் குத்து..ஆனால் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்..! இதைத்தொடர்ந்து அரபிக் … Read more

மூன்றாம் பிறை முதல் 96 வரை.. காதலில் தோற்றாலும் காவியங்களாக மாறிய தமிழின் 10 படங்கள்!

காதலுக்கு எப்போதுமே முன்னுரை தேவை இல்லை. கோபம், விருப்பு, வெறுப்பு, ஆணவம் உள்ளிட்ட உணர்ச்சிகளைவிட, ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் இடையே உருவாகும் காதல் என்ற உணர்வு, எத்தனை எதிர்ப்புகளை சந்தித்தாலும் இன்றளவும் மிக உன்னதமாகவே கருதப்படுகிறது. அது வெற்றியாக அமைந்தாலும் சரி, தோல்வியாக அமைந்தாலும் சரி. சங்கக் காலம் முதல் இன்றுவரை காதலை சொல்லும் விதம் தான் மாறியிருக்கிறதே தவிர, காதல் உணர்வு அழியவில்லை. அந்தக் காதலை மையமாக வைத்து உருவான தமிழ்ப் படங்களில் … Read more

தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமியும் மற்ற நிர்வாகிகளும் இணைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரைத்துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் வைத்தோம். அவற்றை பரிசீலித்த முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் 50 சதவிகித மக்களை படம் பார்க்க அனுமதித்த முதல்வர் இன்று நூறு சதவிகிதம் திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார். தொழில்துறை சிறந்து … Read more

சீரியல் நடிகர் பிரஜின் நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கேரியரை தொடங்கியவர் பிரஜின். பல சேனல்களில் பணியாற்றிய பிரஜின் , சீரியல்களில் நடிக்க தொடங்கினார். மாமனார் கண் முன்னே நட்டநடு வீட்டில் அமலா பால் செய்த காரியம்… தீயாய் பரவும் தகவல்! பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, சின்ன தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வைதேகி காத்திருந்தால் சீரியலில் நடித்தார் பிரஜின். தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நான் திருமணம் செய்து வைக்கவில்லை… … Read more

"நாயகனுக்கோ, நாயகிக்கோ அப்பா ரோலில் நடித்துவிடலாம் என்பதே என் திட்டமாக இருந்தது!"- விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். உங்கள் சினிமா வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். என்றேனும் ஒருநாள் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்திருக்கிறீர்களா? … Read more

வெளியானது `பீஸ்ட்’ படத்தின் `அரபிக் குத்து’ ஹலமதி ஹபீபோ பாடல்! குஷியில் விஜய் ஃபேன்ஸ்!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான `ஹலமதீ ஹபீபோ’ எனும் அரபிக் குத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், ’மாஸ்டர்’ திரைப்பட வெற்றிக்குப்பிறகு, `டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் … Read more

'கலாவதி' சாதனையே ஒரே நாளில் முறியடிக்குமா 'அரபிக்குத்து'

யு டியுப், மற்றும் சமூக வலைத்தளங்களில் தெலுங்கு சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே தான் அதிகமான போட்டி நிலவி வருகிறது. இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக நேற்றே வெளியிட்டுவிட்டார்கள். நேற்று மாலை வெளியான இப்பாடல் அதற்குள் ஒரு புதிய … Read more