30 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. சத்தமின்றி பல சமூக பணிகளையும் செய்து வருகிறர். தனது தந்தை கிருஷ்ணாவின் பெயரில் மகேஷ்பாபு நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்த பணிகளை செய்து வருகிறார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு மருத்துவ பணிகள் செய்வதோடு இரண்டு மாநிலங்களிலும் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளார். இந்த நிலையில் உலக சுகாதார தினத்தையொட்டி 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இந்த தகவல் அவர் மனைவி … Read more

கேமராவுக்காக நடிக்காதீங்க.. விஜய்யை கண்டமேனிக்கு விளாசும் நெட்டிசன்கள்..!

விஜய்யின் ‘ பீஸ்ட் ‘ படத்தின் ஆடியோ ரிலீஸ் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதனை தொடர்ந்து சன் டிவியில் விஜய்யுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு விஜய் கலகலப்பாக பதிலளித்தார். இந்த பேட்டி இணையத்தில் செம வைரலாக பரவியது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் … Read more

ரூ. 1000 கோடி கிளப்பில் இணைந்த ‘ஆர்ஆர்ஆர்’ – வெற்றிக்கு ராஜமௌலி கூறிய காரணம்

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 1,000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளநிலையில், இதுகுறித்து இயக்குநர் ராஜமௌலி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு … Read more

ஹன்சிகா நடிக்கும் வெப் சீரிஸ் : ஆஷ்னா ஜவேரியும், ஜனனியும் நடிக்கிறார்கள்

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், மிஸ்டர் லோக்கல், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களை இயக்கிய ராஜேஷ் எம். தற்போது ஹன்சிகா நடிக்கும் வெப் சீரிசை இயக்குகிறார். இந்த வெப் சீரிசுக்கு 'மை 3' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹன்சிகாவுடன் ஆஷ்னா ஜவேரியும், ஜனனியும் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். தொடர் குறித்து ஹன்சிகா கூறியதாவது: ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு … Read more

சோனியா அகர்வாலின் 'அந்த' ரகசியம் கசிந்ததன் எதிரொலி…

காதல் கொண்டேன் படம் மூலம் கோலிவுட் வந்த சோனியா அகர்வால் தன் முதல் படத்திலேயே நல்ல பெயர் எடுத்துவிட்டார். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர் என்று பெயர் வாங்கினார். காதல், திருமணம், விவாகரத்து என்று அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தது. தற்போது தன்னை தேடி வரும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தான் சோனியா அகர்வாலுக்கு அருமையாக புகைப்படம் எடுக்கும் திறமை இருப்பது தெரிய வந்திருக்கிறது. தனுஷின் மாஜி … Read more

’ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு கூத்து’ வீடியோ பாடல் வெளியீடு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ’பாகுபலி 2’ வெற்றிக்குப்பிறகு ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ ரூ.1000 கோடி ரூபாய்க்குமேல் வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’ஆர்ஆர்ஆர்’ படத்தை உருவாக்கியுள்ளார் ராஜமெளலி. 1920 களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் … Read more

நடிகை பலாத்கார வழக்கு: விசாரணைக்கு ஆஜராக காவ்யா மறுப்பு : மஞ்சு வாரியரிடம் திடீர் விசாரணை

மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்டதாக மற்றொரு வழக்கு திலீப் மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆடியோக்கள் வெளியானது. இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகையும், திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யாக மாதவன் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் விசாரணைக்கு … Read more

தனுஷ் இல்ல 'அவரை' பற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்கும் ரசிகர்கள்

காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு தன் கவனத்தை எல்லாம் கெரியர் பக்கம் திருப்பிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . பயணி என்கிற காதல் பாடல் வீடியோவை இயக்கி, தயாரித்து வெளியிட்டார். இதையடுத்து ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். மேலும் பயணி வீடியோவை தயாரித்த பிரேர்னா அரோராவுக்காக ஒரு இந்தி படத்தை இயக்கவிருக்கிறார். இது தவிர்த்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில் தன் தங்கை சவுந்தர்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை … Read more

23YearsOfPadaiyappa:` நான் வந்துட்டேன் கண்ணா'னு ரஜினி சார் சொன்னார்- படப்பிடிப்பு பற்றி ரமேஷ்கண்ணா

ரஜினி, ரம்யாகிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார் என பலருக்கும் ‘படையப்பா’ ரொம்பவே ஸ்பெஷல் படம்தான். ‘என் வழி… தனி வழி…’, ‘ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான்’ போன்ற எவர்க்ரீன் வசனங்கள் கொண்ட ‘படையப்பா’ படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிறது. அதில் படையப்பாவாக ரஜினி கம்பீரமென்றால்.. நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்திருந்தார். ரஜினியிடம் அவர் சொல்லும் ‘எல்லாருக்கும் உன்ன ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா.. வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல’ டயலாக், இப்போதும் சமூக … Read more

அமைச்சரானார் நடிகை ரோஜா

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று(ஏப்., 11) காலை பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் … Read more