தலைப்பு செய்திகள்
அரபிக்கடலில் உருவானது ‘சக்தி’ சூறாவளி புயல் – சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், அரபிக்கடலில் முதல் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான இந்த பருவத்தின் முதல் சூறாவளி புயல் வெள்ளிக்கிழமை ‘சூறாவளி சக்தி’யாக தீவிரமடைந்துள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. தற்போது குஜராத்தின் துவாரகாவிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் … Read more
Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட் | Automobile Tamilan
இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அடுத்த 18-24 மாதங்களுக்குள் இரண்டு எஸ்யூவி மற்றும் ஒரு எலக்ட்ரிக் கார் என மொத்தமாக மூன்று மாடல்களை வெளியிட உள்ளது. பலரும் அறிந்த அந்த மாடல்கள் டஸ்ட்டர், பிக்ஸ்டெர் மற்றும் க்விட் இவி ஆகும். ஏற்கனவே இந்நிறுவனம் கிகர், ட்ரைபர் மற்றும் ஐசிஇ ரக க்விட் ஆகியவற்றை மேம்படுத்தி விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள காராக டஸ்ட்டர் வரவுள்ளது. Renault Duster சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற டஸ்ட்டரை அடிப்படையாக கொண்டு … Read more
சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் – பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார். ஜப்பான் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒன்று. முதன்முறையாக அங்கே ஒரு பெண் நாட்டை வழிநடத்தும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது மைல் கல் சாதனைப் போலத் தெரிந்தாலும் ஜப்பானில் உள்ள பெண்கள், பெண் விடுதலை செயற்பாட்டாளர்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை என்பதே உண்மை. Sanea Takaichi ஏனென்றால் சனே தகைச்சி பழமைவாத கொள்கைகளைக் … Read more
41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியீடு
சென்னை: 41பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் அமைந்துள்ள ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழுவின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த 27-ஆம் தேதி (செப்டம்பவர்) த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை … Read more
ஜடேஜாவின் ODI கரியருக்கு முற்றுப்புள்ளி? ஆஸி., தொடரில் ஏன் தேர்வாகவில்லை; அகர்கார் என்ன சொல்கிறார்?
இந்திய அணி அக்டோபர் பிற்பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவிருக்கிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் இன்று வெளியிட்டார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி vs ஆஸ்திரேலியா அப்பட்டியலில், ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டன்சி ரோஹித்திடமிருந்து சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கடைசியாக … Read more
வீட்டில் பழைய சோபா, படுக்கை உள்பட தேவையற்ற பொருட்களை அகற்ற புதிய திட்டம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் தேவைப்படாத பழைய பொருட்கள், துணிகள், மின்னணுப் பொருட்களை அகற்ற புதிய சேவை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை அகற்ற 24மணி நேர உதவி அழைப்பு எண்ணான 1913-ல் அழைக்கலாம், 9445061913 எண்ணில் வாட்ஸ்அப் மூலம், அல்லது நம்ம சென்னை செயலியில் பதிவு செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்தச் சிறப்புச் சேவையின் … Read more
"விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக திட்டம்” – சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள், மரங்களின் மாநாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சையில் தண்ணீரின் மாநாடு, தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்தப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்துவதற்காக இடத்தைப் பார்வையிட்டார். இதற்காக படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்று ஆய்வும் செய்தார். முதல்வர் ஸ்டாலின் – நடிகர் விஜய் TVK Vijay Karur Stampede: நெஞ்சை உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் | Photo Album … Read more
திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம்! வி.பி.கலைராஜன்
சென்னை: திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்து அந்த அணியின் செயலர் வி.பி.கலைராஜன் அறிவித்து உள்ளார்/ திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அந்த அணியின் செயலா் வி.பி.கலைராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா் ஆகிய நிலைகளில் இலக்கிய அணிக்கான அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் நியமிக்கப் பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா். ஒவ்வொரு நிா்வாகிகளின் பெயா், முகவரி அடங்கிய பட்டியலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரணி உள்பட … Read more
பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் – ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!
ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது. பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பாதுகாப்பு, பக்கத்தில் ஏதேனும் கடைகள் இருக்கிறதா என்பதை பற்றி விசாரிப்போம். ஆனால் ஜப்பானில் ஒரு வினோத நடைமுறை பின்பற்றபட்டு வருகிறது. அதாவது வாங்கவிருக்கும் வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் அந்த வீட்டை வாங்குகின்றனர். Japan Property … Read more