100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சர்

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர் இதனால் விரைவான ரயில் போக்குவரத்து ஏற்படும் என்று கூறினார். சென்னை கடற்கரை மற்றும் … Read more

Wayanad Landslide: நொடியில் கரைந்த உறவுகள்… கண்ணீர் வற்றி கலங்கி நிற்கும் இளம்பெண் ஸ்ருதி

ஆசையாய் கட்டிய வீடு, வாங்கிய வாகனங்கள், சேர்த்துவைத்த பணம், நகை என எது போனாலும் உறவுகள் அருகிலிருந்தால் இழந்த எதையும் மீண்டும் பெற்றுவிடலாம் என்பதே ஒவ்வொருவரின் நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையை சுக்கு நூறாய் உடைத்து நூற்றுக்கணக்கானவர்களைக் குடும்பங்களின்றி நிற்கதியாய் நிற்கவைத்திருக்கிறது வயநாடு நிலச்சரிவு. Wayanad Landslide இதுவரையில், மட்டும் 300-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை இந்த இயற்கை பேரழிவு பறித்திருக்கிறது. காணாமல் போனவர்கள் பலரை மீட்புக் குழுவினர் தேடிவரும் நிலையில் இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் … Read more

4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு… வயநாட்டில் தேடுதல் பணி தீவிரம்…

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. முண்டகைக்கு அருகே படவெட்டிக்குன்னு எனும் இடத்தில் நிலச்சரிவில் சிக்கித் தவித்து வந்த 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சிறிய ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்களை ராணுவத்தினர் மீட்டுள்ள நிலையில் மேலும் சிலர் உயிருடன் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரில் Hy-CNG Duo அறிமுகம்

சமீபத்தில் எக்ஸ்டர் காரில் ஹூண்டாய் நிறுவனம் இரட்டை சிஎன்ஜி சிலிண்டர் முறையை அறிமுகம் செய்த நிலையில் தற்போது கிராண்ட் i10 நியோஸ் கார் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி முறையானது மிகச் சிறப்பான வகையில் பின்புற பூட் ஸ்பேஸை பராமரிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் ஒரு அம்சமாகும். இது ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இது போன்ற நுட்பத்தைத்தான் தனது சிஎன்ஜி மாடல்களில் பயன்படுத்திய வருகின்றது அதற்கு போட்டியாக தான் ஹூண்டாய் நிறுவனமும் இந்த … Read more

`31 ஆண்டுகளாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ – முதியவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து

மும்பையை சேர்ந்த 73 வயது முதியவர் மீது, 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முதியவர் தன்னை 1987-ம் ஆண்டு 31 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். 1987-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் முதியவரின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணுடன் முதியவர் கட்டாய உறவு வைத்துக்கொண்டதாகவும், அதன் பிறகு 2017-ம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் … Read more

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 317ஆக உயர்வு… 240 பேர் மாயம்… 4வது நாளாக தொடரும் மீட்பு பணி…

சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 240 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை காரணமாக நேற்று மாலை 4 மணிக்குப் பிறகு மீட்பு பணிகளை தொடரமுடியாமல் போன நிலையில் நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. சாலியாரில் இன்று அதிகாலை தொடங்கிய இந்த தேடுதல் முயற்சிகளுக்கு உதவ கூடுதல் … Read more

2 கிராமங்களை இணைத்த மேஜர் சீதா.. வயநாட்டில் 31 மணி நேரத்தில் பாலம் கட்டிய இரும்பு பெண்.. ரியல் ஹீரோ

வயநாடு; வயநாட்டில் இடிந்த சூரல்மாலா மற்றும் முண்டக்கை இடையிலான பாலத்திற்கு பதிலாக இந்திய ராணுவம் அதிரடியாக 31 மணி நேரத்தில் புதிய பாலம் ஒன்றை கட்டி உள்ளது. இதற்கான குழுவை வழி நடத்திய இந்திய ராணுவ மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் நடைபெற்றது. 31 மணிநேரம் இடைவேளையின்றி உழைத்த பிறகு, இந்திய இராணுவம் நிலச்சரிவுகளால் சிதைக்கப்பட்ட வயநாட்டில் Source Link

Doctor Vikatan: சாப்பாட்டுக்கு முன் 72, சாப்பிட்ட பிறகு 98… ரத்தச் சர்க்கரை அளவு சரிதானா?

Doctor Vikatan: என் வயது 46. நான் என்னுடைய சர்க்கரை அளவை சுயமாகப் பரிசோதனை செய்து கொண்டதில்  சாப்பாட்டுக்கு முன் 72, சாப்பாட்டுக்குப்  பின் 98 என்று வந்தது. இது சரியான அளவா?   இந்திய சூழலுக்கான சர்க்கரை அளவு சர்வதேச பட்டியலுக்கு மாறுபட்டது என்பது உண்மையா? -சோமசுந்தரம், மதுரை, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயந்த் லியோ. லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயந்த் லியோ நீங்கள் … Read more

ஓகேனக்கல்லில் கடும் வெள்ளப் பெருக்கு : வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்

ஒகேனக்கல் ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஏர்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர பொதுமக்கள் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  எனவே கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் … Read more