அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் நவ.10-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் நேற்று பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார். சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் … Read more

மழை பாதிப்பு: கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..! தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது நாளாக மழை நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட  தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். மழையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர் என்றும் விமர்சித்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த 13ந்தேதி முதல் கனமழை முதல் அதிகனமழை கொட்டியது. இதனால் பல இடங்கள் … Read more

பெட்ரோல் பங்க்கில் நுழைந்த பாஜக பிரபலம்.. கார் கிட்ட போன ஊழியர்.. அடுத்த நடந்த விசித்திரம்.. பார்ரா

கான்பூர்: பாஜக எம்எல்ஏ ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பாஜகவினர், இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கியும் வருகிறார்கள்.. என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்? உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.. இங்குள்ள சர்க்காரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத்.. இவர் நேற்று தன்னுடைய காரில் Source Link

ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு தலாய் லாமா வாழ்த்து

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உமர் அப்துல்லாவுக்கு புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஷேக் அப்துல்லாவின் காலத்தில் இருந்து உங்களது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை அறியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நமது நட்பை நான் … Read more

புதிய ராயல் என்ஃபீல்டு பீர் 650 அறிமுக விபரம்

ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டார் 650 மாடல் ஸ்கிராம்பளர் வகையாக மாற்றப்பட்டு இன்டர்செப்டார் பீர் 650 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் முக்கிய விபரங்கள் படங்கள் மற்றும் அறிமுக விபரம் ஆனது வெளியாகி உள்ளது. குறிப்பாக அடிப்படையில் 650 சிசி இன்ஜினை பகிர்ந்து கொள்கின்ற இந்த பீர் 650 மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பல்வேறு நிறங்களானது கொடுக்கப்பட்டு அசத்தலான, ஸ்டைலிஷ் ஆன ஸ்கிராம்ப்ளராக விளங்க உள்ளது. இன்டர்செப்ட்டார் மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் … Read more

கழுகார்: `பஞ்சமி நில மீட்பு… விசிக-வின் அடுத்த ஆயுதம் முதல் மாநாட்டை ரத்துசெய்த தலைமை வரை’

போட்டுடைக்கும் சீனியர் கதர்கள்!நேரில் செல்லத் தயங்கும் தலைமை… சாம்சங் ஊழியர்கள் போராட்டத்துக்கு, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அதன் தலைவர்கள் பலர் சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தனர். ஆனால், காங்கிரஸ் கமிட்டி சார்பில் மட்டும் மாநிலத் தலைவருக்கு பதிலாக, முன்னாள் தலைவர் தங்கபாலு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். ‘புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அகில இந்திய தலைமையிடம் கலந்தாலோசிக்க வேண்டியிருந்ததால், செல்வப்பெருந்தகை டெல்லிக்குச் சென்றுவிட்டார். அதனால்தான் அவருக்கு பதிலாக வேறொருவரை அனுப்பிவைத்திருக்கிறார்கள்’ என அப்போது காரணம் சொல்லப்பட்டது. செல்வப்பெருந்தகை ஆனால், … Read more

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்! அமைச்சா் மா.சு தகவல்…

சென்னை: சென்னையில் மழை பாதித்த இடங்களில்  நோய் தொற்று பரவாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, டைபாய்டு பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க  தீவிர நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் பெருமழை பெய்த கடந்த 15ந்தேதி அன்று சென்னையின் பல … Read more

ஹர்தீப் சிங் கொலை.. இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.. பின்வாங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ

டொரான்டோ: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இதற்கிடையே இப்போது திடீரென இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் தகவல் அடிப்படையிலானது மட்டுமே என்றும் ஆதாரம் இல்லை என்று சொல்லி பேக் அடித்துள்ளார். இந்தியர்கள் அதிகம் Source Link

டொயோட்டா டைசோர் லிமிடெட் எடிசன் அறிமுகமானது

டொயோட்டா நிறுவனம் தனது டைசோர் கிராஸ்ஓவர் எஸ்யூவி காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு லிமிடெட் எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட மாடல் விற்பனைக்கு ரூ.10.56 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை விலையில் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பண்டிகை கால எடிசன் ஆனது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிசனில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் அறியப்படுகின்றது. இந்த சிறப்பு எடிசனில் வெளிப்புறத்தில் அண்டர்பாடி … Read more