“இந்தியா”வையே எதிர்க்க துணிந்த அசாம் முதலமைச்சர்.. ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய பெயர் என பகீர்

India oi-Noorul Ahamed Jahaber Ali கவுஹாத்தி: இந்தியா காலனி மரபிடம் இருந்து கடன் வாங்கிய பெயர் என்றும், பாரதமே வெற்றி பெறும் எனவும் பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக நேற்றும் நேற்று முந்தினமும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பாட்னாவில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற 2 வது கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், … Read more

உத்தரகாண்ட் மின்மாற்றி வெடித்து சிதறி 10 ஊழியர்கள் பலி

சமோலி உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் நமாமி கங்கை திட்ட தளத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை இங்கு 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது மின்மாற்றி வெடித்து சிதறியது இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இதில் பலர் மின்சாரம் பாய்ந்து பலியானார்கள் மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமோலி போலீஸ் சூப்பிரெண்டு பர்மேந்திர தோவல் தெரிவித்துள்ளார். தினத்தந்தி

TAFE tractor – டாஃபே மற்றும் ஐஷர் டிராக்டர் வாங்க நிதியுதவி வழங்கும் இந்தியன் வங்கி

நாட்டின் முன்னணி டிராக்டர் தயாரிப்பாளர்களில் ஒன்றான டாஃபே மற்றும் டிஎம்டிஎல் (TAFE & TMTL) நிறுவனங்களோடு, இணைந்து இந்தியாவின் பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி டிராக்டர் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் நிதியுதவி வழங்க ஒப்பந்தம், இந்தியன் வங்கியின் செயலாக்க இயக்குனர் திரு. இம்ரான் அமீன் சித்திகி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. டாஃபே நிறுவனத்தின் கீழ் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் ( Massey Ferguson – MF), டாஃபே டிராக்டர், IMT டிராக்டர் ஆகியவற்றுடன் TMTL கீழ் … Read more

கனவு – 103| கள்ளக்குறிச்சி – வளமும் வாய்ப்பும்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல், பருத்தி, சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, தர்பூசணி, மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நிலப் பகுதியும், மண் வளமும் மாறுபட்டு இருப்பதால் நல்ல விளைச்சல் என்பது அரிதானதே. அப்படியே விளைச்சல் கிடைத்தாலும் சந்தையில் போதுமான விலை கிடைப்பதில்லை. இதன் காரணமாக, பல ஏக்கர் நிலங்கள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலங்களாக இருக்கின்றன. இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வளம் என்பது இரண்டு விஷயங்களையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. ஒன்று, ஆடு, மாடு, … Read more

நாளை இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இந்தியா வருகை

கொழும்பு இலங்கை அதிபர் விக்ரமசிங்கே நாளை 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இலங்கை அதிபர் விக்ரமசிங்கே இந்திய ரூபாயை அமெரிக்க டாலருக்குப் பதிலாக பொதுப் பணமாகப் பயன்படுத்த விரும்புவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.   இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 20, 21-தேதிகளில் (நாளை, நாளை மறுதினம்) அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார். அதிபரது இந்த பயணம் … Read more

\"மாமியார்\".. ஆட்டுத்தலையை திருப்புறது போல திருப்பிட்டாராம்.. இவரும் ஒரு பெண்ணா? அது யாரு பக்கத்துல?

India oi-Hemavandhana கான்பூர்: ஆட்டுத்தலையை திருகுவது போல திருகி கொன்றிருக்கிறார்கள் அந்த பெண்ணை.. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது? உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. பிஞ்சு குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இளம்பெண்கள் மீது பாலியல் வக்கிரங்களும் அதிகரித்து வருகின்றன. அதேபோல, குடும்ப வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் கொடுமை என்னவென்றால், பெண்களுக்கு பெண்களே எதிரியாகிவிடுவதுதான். ஆண் வாரிசு பெற்று தராத மருமகள்கள் ஏராளமானோர் மாமியார்களின் பிடியில் … Read more

கள்ளக்காதலியின் கணவரை துண்டுதுண்டாக வெட்டி கொன்று புதைத்து மாங்கன்றுகள் நட்ட கொடூரன்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா (வயது 33). இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 11-ம் தேதி ஜோகிந்தரா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜோகிந்தராவின் தந்தை இது குறித்து 13-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மதன்லாலை கைது செய்து விசாரணை … Read more

மாற்றுத்திறன் மணமக்கள், சைகை மொழியில் அன்பு பரிமாற்றம்; மகிழ்ச்சியில் வாழ்த்திய மக்கள்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனகுமார் – ஷீபா தம்பதியின் மகன் விவேக் மோகன். இவர், பிறவியிலேயே காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஐ.டி.ஐ எலக்ட்ரிக்கல் முடித்தவர், இப்போது. கேரள மின்சாரவாரியத்தில் ஒப்பந்தப் பணிகள் செய்து வருகிறார். இவருக்குத் திருமணத்துக்காக பெண் கிடைக்காமல் பெற்றோரும், உற்றாரும், ஊர் மக்களும் பல ஆண்டுகளாக பெண் தேடும் படலத்தில் இறங்கியிருந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் மூலம், வர்ஷாவின் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது. கொல்லம் போருவழி பனப்பெட்டி … Read more

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது. குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தியுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ள்து.

"பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளிடமிருந்து விலகியே நிற்போம்" – மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, எதிர்க்கட்சி கூட்டணியில் சேராதது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதவாது:- சாதிய மனப்பான்மையுடன் முதலாளித்துவ எண்ணங்களைக் கொண்ட கட்சிகளை காங்கிரஸ் கட்சி கட்டாயப்படுத்தி கூட்டணியில் சேர்க்கிறது. அதே நேரத்தில் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி வைத்துள்ளது; எனவே பாஜக மற்றும் காங். கூட்டணிகளிடமிருந்து பகுஜன் சமாஜ் விலகியே இருக்கும். எல்லோருமே ஒன்றுதான். அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள். மக்களுக்கு அளித்த … Read more