PAK vs NEP: "மரண காட்டு காட்டிட்டாண்ணே!" – பாபரின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியிலேயே அதிரடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. 2023-ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்கப் போட்டியில், நேபாளம் அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் … Read more

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!

பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது . அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு  ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1-ன் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே … Read more

விநாயகர் அகவல்: மூலமும் விளக்கமும்! நினைத்ததை நடத்தி வைக்கும் அதிசயப் பாடல்!

ஔவையின் விருப்பத்தை சடுதியில் நிறைவேற்றிய விநாயகப்பெருமான், இந்த பாடலைப் பொருள் உணர்ந்து பாடுபவருக்கு எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. விநாயகர் அகவல் விநாயகர் அகவல் – ஔவையார் அருளியது சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் … Read more

இன்று முதல் 2வது முனையத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கம் துவக்கம்| International flights start from Terminal 2 from today

பெங்களூரு:’இன்று காலை முதல் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்களின் இயக்க துவங்கும்’ என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், தினமும் 30 விமானங்கள் வந்து செல்ல உள்ளது. பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை, கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முழுமையான பணிகள் முடியாவிட்டாலும், உள்ளூர் விமான போக்குவரத்து ஜனவரியில் துவங்கியது. இந்நிலையில், பெங்களூரு விமான … Read more

2024 தேர்தலுக்காக மக்களுக்கு ‘பரிசு’ கொடுக்க தொடங்கிவிட்டதா மோடி அரசு?!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 200 ரூபாயைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் முடிவு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ’சமையல் எரிவாயு விலை குறைப்பு ரக்சா பந்தன், ஓணம் பண்டிகை ஆகியவற்றையொட்டி பிரதமர் மோடியின் பரிசு’ என்று குறிப்பிட்டார் அனுராக் தாக்கூர் மேலும், ‘உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 ஏழை லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் … Read more

மக்களவை செயலகம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை ரத்து செய்தது

டில்லி காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடை நீக்கத்தை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த தொடரில் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பி இருந்தன.   இதனால் பலமுறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடரின் நிறைவு நாள் அன்று மக்களவையில் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் … Read more

டொயோட்டா ருமியன் காரின் ஆன்-ரோடு விலை விபரம் – Toyota rumion on-road price in Tamil Nadu

டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 7 இருக்கை பெற்ற ருமியன் எம்பிவி காரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். நேரடியாக மாருதி எர்டிகா காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் காருக்கு போட்டியாக கியா கேரன்ஸ், XL6 மற்றும் எர்டிகா உள்ள நிலையில் கூடுதலாக 7 இருக்கை பெற்ற மற்றொரு பட்ஜெட் கார் ரெனால்ட் ட்ரைபர் விற்பனையில் உள்ளது. Toyota Rumion On-Road Price in Tamil Nadu எர்டிகா காரை … Read more

புதுவையில் எரிவாயு விலை ரூ.500 குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எரிவாயு விலையில் ரூ.500 குறைத்து உத்தரவிட்டுள்ளார்.   நேற்று வீட்டு உபயோக ஏரோவாயு சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என விலையைக் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலைச் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று புதுச்சேரியில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 குறைத்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ”சிவப்பு அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானிய குறைப்பும் சேர்த்து … Read more