தலைப்பு செய்திகள்
உம்மன் சாண்டி இறுதி ஊர்வலம் : 15 மணி நேரமாக வழிநெடுகிலும் பால்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி…
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோட்டயம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. கேரள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கொண்டு செல்லப்படும் அவரது உடலைக் காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த இறுதி ஊர்வலம் இரவு 10 மணி ஆகியும் சுமார் 90 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளது. … Read more
TVS iQube Electric – குறைந்த விலை ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் டிவிஎஸ் மோட்டார்
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா எஸ் 1 ஏர், வரவிருக்கும் ஏதெர் 450S போன்ற குறைந்த விலை மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் குறைந்த வசதிகள் மற்றும் ரேன்ஜ் பெற்ற மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஓலா எஸ் 1 ஏர் நடப்பு ஜூலை மாத இறுதியில் டெலிவரி துவங்கப்பட உள்ள நிலையில், இதற்கு போட்டியாக ஏதெர் 450எஸ் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. TVS iQube Electric ஃபேம் 2 … Read more
“ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஸ்மிஸ் செய்ய, நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்!" – டெல்லியில் டி.ஆர்.பாலு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (20-ம் தேதி) தொடங்கவிருக்கிறது. அதில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து இன்று மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு, எம்.பி திருச்சி சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். நாடாளுமன்றம் அப்போது பேசிய டி.ஆர்.பாலு, “நாளைமுதல் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. 17 நாள்கள் மட்டுமே நடைப்பெறும் … Read more
இனி சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை இல்லை : மத்திய அரசு
டில்லி மத்திய அரசு இனி சர்வதேச விமானப் பயணிகளுக்கு கொரோனா சோதனை இல்லை என அறிவித்துள்ளது. கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரும் சரவதேச விமானப் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் ஆக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு விமான நிலையத்திலும் சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டன. தற்போது மத்திய அரசு இந்தியாவுக்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலகெங்கும் குறைந்துள்ளதால் இனி இந்த … Read more
Delhi court grants bail to wrestler Sushilkumar in murder case | கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு டில்லி கோர்ட் ஜாமின்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சக வீரரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டு உள்ள ஒலிம்பிக் மல்யுத்த வீரர் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு டில்லி கோர்ட் ஜாமின் வழங்கியது. இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக டில்லி போலீசாரால் அறிவிக்கப்பட்டார். இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்ததையடுத்து கடந்த … Read more
Toyota Hilux – இந்திய ராணுவத்தில் இணைந்த டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், முதன்முறையாக இந்திய ராணுவத்துக்கு ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை விநியோகம் செய்துள்ளது. ஏற்கனவே, ராணுவத்தில் மாருதி ஜிப்ஸி, மஹிந்திரா ஸ்கார்பியோ, டாடா ஸ்ட்ரோம், செனான் பிக்கப் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 13000 அடி உயரத்தில் முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை வரையிலான கடுமையான வானிலை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஹைலக்ஸ் 2 மாதங்களுக்கும் மேலாக இந்திய இராணுவத்தின் வடக்குப் படையின் விரிவான மற்றும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. Toyota Hilux டொயோட்டா ஹைலக்ஸ் … Read more
UCC-ஐ எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம் | பாபநாசத்திலிருந்து நீர் திறந்த அப்பாவு – News In Photos
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகளின் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. புதுச்சேரி: தீ விபத்தில் வீடு சேதமடைந்த நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்கா ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பாதிப்படைந்த வீட்டுக்கு ரூபாய் 50,000-க்கான காசோலையை வழங்கினார். சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் … Read more
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு… இறுதி ஆட்டம் செப்டம்பர் 17 ல் இலங்கையில் நடைபெறும்
6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30 பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாள் அணிகள் ஒரு குழுவாகவும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மற்றொரு குழுவாகவும் விளையாட உள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற உள்ள இந்த போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முக்கிய ஆட்டம் இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் செப்டம்பர் 2 ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டு குழுவிலும் … Read more