`நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானதாக இருந்தால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள்' – ஈஷா யோக மையம்!

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் சட்டத்துக்கு புறம்பாகவும், யானைகளின் வழித்தடத்திலும் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுகின்றன. ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான கட்டடங்கள் மலைதள பாதுகாப்புக் குழுமத்திடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டன என்று தமிழக அரசின் நகரமைப்பு திட்டமிடல் துறை … Read more

சென்னையில் தற்போது கனமழை

சென்னை சென்னை மற்றும்  புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தவிர சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

ஒடிசா ரயில் விபத்து: 3 அதிகாரிகள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை| Odisha train accident: CBI, charge sheet against 3 officials

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள 3 ரயில்வே அதிகாரிகள் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஒடிசாவின், பாலாசோர் மாவட்டத்தில், ஜூன் 2ம் தேதி கோல்கட்டா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட பயங்கர விபத்தில், 293 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரயில் விபத்துக்கு … Read more

ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற விவகாரம்- கணவன் உள்ளிட்ட 7 பேர் கைது

ராஜஸ்தானில் பழங்குடியின பெண்ணை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு என கூறி கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் செய்த இந்த செயல் அனைவரையும் வெட்கி தலைகுனிய வைத்தது. நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற போது யாரா ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது வைரலானது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமை; அமித் ஷா உட்பட 7 பேர் – குழுவில் யார் யார்?!

செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் என்ற அறிவிப்பு வெளியானபோதே, இந்தக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க அறிமுகப்படுத்தப்போவதாக பேச்சுக்கள் எழுந்தது. அதற்கேற்றவாறு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியங்கள் தொடர்பாக ஆராய குழுவும் அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தபோதும், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவுகள் உட்பட பல்வேறு வேலைகளை … Read more

தமிழகம் தேவையின்றி மேகதாது திட்டத்தை எதிர்க்கிறது : கர்நாடக முதல்வர்

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவையின்றி தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை.  ஆனால் கபினி அணை மட்டும் நிரம்பியது.  … Read more

வணிக கேஸ் சிலிண்டர் விலையும் குறைந்தது.. அந்த்யோதயா அன்ன யோஜனாவில் அடித்த ஜாக்பாட். பாருக்கு பாருங்க

பானாஜி: சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்ட நிலையில், வணிக கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் தென்பட்டுள்ளது. அத்துடன், அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு, கோவா மாநிலம் குட்நியூஸ் அறிவித்துள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், அதேபோல, வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ கிலோ எடையிலும் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. Source Link

இந்தோனேஷியாவில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு: பிரதமர் பங்கேற்பு| PM Modi to attend ASEAN, East Asia Summit meetings in Indonesia next week

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தோனேஷியாவில் செப்.,6 மற்றும் 7 ல் நடக்கும் ஆசியான் மாநாடு மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்தோனேஷிய அதிபர் ஜோகா விடோடோவின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்க மோடி ஜகார்த்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு ஆசிய மாநாடானது, ஆசியான் அமைப்பு தலைவர்கள் மற்றும் இந்தியா உள்ளிட்ட கூட்டாளிகள் இடையே … Read more

30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் நபர்களை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகளை சிறப்பு புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தோடா மாவட்டம் காட் கிராமத்தைச் சேர்ந்த பிர்தாஸ் அகமது … Read more