ராஜஸ்தான் மாநிலத்தில் லித்தியம் கண்டுபிடிப்பு

ஜெய்ப்பூர் காஷ்மீருக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் லித்தியம் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறிவியல் வளர்ச்சியில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதை விட பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டது மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  லித்தியம் வகை பேட்டரிகள் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், மின்சார வாகனங்கள், விமான உற்பத்தி, சூரிய மின் தகடுகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் லித்தியத்தின் தேவை 500 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகத் தங்கத்துக்கு இணையாக லித்தியத்துக்கு மதிப்பு அளிக்கப்படுவதால் அந்த கனிமம், … Read more

ஜம்மு ஏழுமலையான் கோவில் ஜூன் 8ல் மகா சம்ப்ரோக்ஷணம்| Maha Samprokshan on 8th June at Etummalayan Temple, Jammu

திருப்பதி :ஜம்மு – காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோவில் மகாசம்ப்ரோக்ஷணத்தை ஜூன் 8ம் தேதி நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் உள்ள மசீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் இறுதி பணிகளை நேரில் ஆய்வு செய்த தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று கூறியதாவது: தொலைதுாரத்தில் இருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்காக நாடு முழுதும் உள்ள … Read more

மணிப்பூரில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு – ராணுவம் கண்காணிப்பு

இம்பால், மணிப்பூரில், பெரும்பான்மையாக உள்ள ‘மெய்தி’ இன மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் ஏற்பட்ட வன்முறையால் இருதரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பெரிதும் பாதிக்கப்பட்ட சுரசந்த்பூர், டெங்னோபால், பிஷன்பூர், கங்க்போக்பி ஆகிய மாவட்டங்களில் அமைதி நிலவுகிறது. ஊரடங்கு தளர்வு … Read more

“துரைமுருகன், அவர் பையன் கதிருக்கு வேண்டுமானால் அறிவுறுத்தல் வழங்கலாம்; ஆளுநருக்கு அல்ல” – தமிழிசை

தெலங்கானா ஆளுநரும், புதுவையின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், திண்டிவனம் அருகே ஓமந்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் நேற்று(09-05-2023) மாலை கலந்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சகோதரர் ரகுபதி சொன்ன பதிலில் மிக்க மகிழ்ச்சி. ஏனெனில், அவர் சொன்ன பதிலில், “நாம் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம். இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கே நாம் வாழ்த்து சொல்லிவிட்டோம் என்று சொன்னால், நமக்கே நாம் வாழ்த்து சொன்ன மாதிரி” என்று, ‘இந்து’ என அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதானிக்கு … Read more

சூரியகுமார், நேஹல் அதிரடி: பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரில் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹல் ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பில் அபார வெற்றிபெற்றுள்ளது. விராட் கோஹ்லி ஏமாற்றம் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தெரிவு செய்தது. இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோஹ்லி களமிறங்கினர். 4 பந்தில் 1 ஓட்டம் எடுத்திருந்த விராட் கோஹ்லி முதல் ஓவரிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து … Read more

எரிவாயு சிலிண்டர் தாமத விநியோகத்தால் தவிக்கும் சென்னை மக்கள்

சென்னை சமையல் எரிவாயு சிலிண்டர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 10 முதல் 20 நாட்கள் தாமதம் ஆகின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. தற்போது சிலிண்டர் தீர்ந்து போனால், ஒருங்கிணைந்த குரல் சேவை பிரிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்., பதிவு செய்த ஓரிரு நாட்களுக்குள் புதிய சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். … Read more

சட்டசபை தேர்தலில் இன்று காலை 7:00 மணிக்கு… ஓட்டுப்பதிவு துவக்கம்| Voting begins today at 7:00 am in the assembly elections

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று காலை 7:00 மணிக்கு துவங்கி, மாலை 6:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. தேர்தல் பணியில், 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 224 தொகுதிகளிலும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் பதவிக் காலம், வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. … Read more

பெங்களூருவில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: தனியார் பள்ளி பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் உள்ளிட்ட சிலர் பணியில் இருந்தனர். இந்த நிலையில் பள்ளிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது விரைவில் வெடித்து சிதற உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து பள்ளியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஹெப்பகோடி … Read more

Tamil News Live Today: கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்… இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு! 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் வட மாநிலங்களில் அவ்வப்போது தேசியக் கட்சிகளுக்கு ஷாக் அளிக்கும் ஆம் ஆத்மி, தேதியவாத காங்கிரஸ் மற்றும் ஒவைசியின் AIMIM கட்சிகளும் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, தனிப் பெரும்பான்மை பெற … Read more

வீட்டுக்குள் பிணைக் கைதியாக்கப்பட்ட பெண்… பின்னர் நடந்த துயரம்: பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டு, பொலிசார் அவரை பத்திரமாக மீட்க முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. பெண்மணி பிணைக் கைதியாக கென்ட், டார்ட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சனிக்கிழமை பகல் 12.40 மணியளவில் பொலிசார் அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். அந்த குடியிருப்புக்குள் 29 வயது நபரால் 36 வயது பெண்மணி ஒருவர் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. Credit: Facebook அவர் காயங்களுடன் காணப்பட்ட நிலையில், அது கைத்துப்பாக்கியால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்த … Read more