இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் தமிழக அரசு திரைப்படக் கல்லூரி

சென்னை தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இந்த ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்களுக்கு விண்ணப்பங்கள் கோருகின்றது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும்.  திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் இந்நிறுவனம் தனித்துவம் மிக்க நிறுவனமாகும். … Read more

காங்., மூத்த தலைவர் கடிகாஜலம் மறைவு| Congress, senior leader Katikajalam passes away

தங்கவயல், : இன்று ஓட்டுப்பதிவு செய்ய ஆர்வமாக இருந்த, தங்கவயல் காங்கிரஸ் மூத்த தலைவர் கடிகாஜலம், 97, நேற்று காலமானார். நாடு சுதந்திரம் அடைந்து நடந்த முதல் தேர்தல் துவங்கி, 2019 லோக்சபா தேர்தல் வரை ஓட்டளித்து வந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் கடிகாஜலம், 2023 சட்டசபைத் தேர்தலிலும் ஓட்டளிக்க ஆர்வமாக இருந்தார். ‘ஓட்டளிப்பது நமது ஜனநாயக கடமை. நம்மை நாமே ஆட்சி நடத்த தானே சுதந்திர போராட்டமே நடந்தது’ என்று கூறியவர். அகில இந்திய டேபிள் … Read more

கர்நாடகத்தில் இந்து அமைப்பினர் பஜனை பாடல்கள் பாடி போராட்டம்; பா.ஜனதா தலைவர்களும் பங்கேற்றதால் பரபரப்பு

பெங்களூரு: போராட்டம் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா, பஜ்ரங்தள அமைப்பு, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியது. மேலும் பிரதமர் மோடியும், காங்கிரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசார கூட்டங்களில் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று முழக்கமிட்டார். அதுபோல் கூட்டங்களில் பங்கேற்ற மக்களும் ஜெய் பஜ்ரங் பலி கோஷமிட்டனர். அத்துடன், பா.ஜனதாவினர் ஆஞ்சநேயர் … Read more

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி… பல மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் டிரம்ப் குற்றவாளி இதில் பல மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் E Jean Carroll என்பவர் முன்னெடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  Image: JUSTIN LANE இழப்பீடாக 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் … Read more

மத்தியப்பிரதேசத்தில் மேலும் ஒரு சிவிங்கி புலி மரணம்

குணோ, மத்தியப்பிரதேசம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி மரணம் அடைந்துள்ளது. கடந்த 1952 ஆம் ஆண்டு இந்தியாவில் சிவிங்கி புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, இப்புலிகளை இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. எனவே, ஆப்பிரிக்காவிலுள்ள நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்குச் சிவிங்கி புலிகள் கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டது.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு … Read more

வழக்கு நிலுவையில் இருக்கும்போது கருத்து தெரிவிக்க கோர்ட் கண்டனம் * கர்நாடகா முஸ்லிம் இடஒதுக்கீடு| Court reprimands to comment during pendency of case * Karnataka Muslim reservation

புதுடில்லி’ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அது தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் அரசியல் ரீதியில் கருத்து தெரிவிப்பது முறையானதல்ல. ‘நீதிமன்றத்தின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும்’ என, கர்நாடகா முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்து வழக்கில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எந்தத் தவறும் இல்லை கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினரில், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 4 சதவீத இட ஒதுக் கீட்டை ரத்து செய்து, … Read more

அரியானாவில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் தீ விபத்து

சண்டிகர், அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவருக்கு சண்டிகரில் வீடு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் பூபிந்தர் சிங்கின் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ஏற்பட்ட தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக … Read more

கொடைக்கானல்; சுற்றுலாவுக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்… திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது!

​சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த​வர் வழக்கறிஞர் ராஜசேகர். இவர் ​சென்னை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். இவரின் மனைவி மீனாட்சியும் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இரு​க்கிறார். ​மீனாட்சி​, அவருடைய 2 மகன்கள்,​ உறவின​ர்களான கயல்விழி, அவரின் 2 பெண் குழந்தைகள் ​என​ மொத்தம் ​6 பேர் கொடைக்கானலுக்கு ​ஏப்ரல் 7-ம் தேதி சுற்றுலா வந்தனர். கொடைக்கானல் ​கொடைக்கானல், நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் இவர்கள் தங்கியிருந்தனர். ​​மீனாட்சி, கயல்விழி ஆகியோர் ​குழந்தைகளுடன் கொடைக்கானலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மறுநாள் காலையும் வெளியே செல்ல திட்டமிட்டனர். ஆனால் மீனாட்சிக்கு உடல்நலம்​ சரியில்லாததால் … Read more

கர்நாடகாவில் பாஜகவின் 40% கமிஷன் ஆட்சி : ஒப்பந்ததாரர்கள் அறிக்கை

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாக அரசு ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். நாளை கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.   தேர்தலில் காங்கிரஸ், ம ஜ த மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.  கருத்துக் கணிப்புப்படி இந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் மத்திய பாஜக அமைச்சர்கள் பெருமளவில் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநில பாஜக அரசைத் தொடர்ந்து … Read more

பற்றி எரியும் பாகிஸ்தான்.. ராணுவ வாகனங்களை எரித்த இம்ரான் கான் கட்சியினர்.. நாடு முழுவதும் பதற்றம்!

International oi-Vignesh Selvaraj இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல ராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை … Read more