சிக்கிம்: பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்; மீட்புப்பணிகள் தீவிரம்!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, குழந்தை, பெண் உட்பட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பிரபல சுற்றுலாத்தலமான நாது லா பகுதியில், காங்டாக்-நாது லாவை இணைக்கும் ஜவஹர்லால் நேரு மார்க்கின் 15-வது மைல் கல்லில் காலை 11 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிக்கிம் பனிச்சரிவு இது குறித்து செக்போஸ்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனம் டென்சிங் பூட்டியா, “பாஸ்கள் 13-வது மைலுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. … Read more