நவ. 5ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி?

டெல்லி : இந்தியாவில் முழுவதும் நடக்கும் முதல் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக். 5ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நவ. 5ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, தர்மசாலா, ஹைதராபாத் உள்ளிட்ட 12 நகரங்களில் போட்டிகள் நடக்க உள்ளன.

Doctor Vikatan: எப்போதும் தூக்கம்; படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குதல்; அனீமியாவின் அறிகுறிகளா?

Doctor Vikatan: கடந்த சில தினங்களாக பணியிடத்தில் தூக்கம், மாடிப்படிகளில் ஏறி இறங்கினாலே மூச்சு வாங்குவது, கவனச்சிதறல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறேன். இவையெல்லாம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறாள் என் தோழி. நான் மூன்று வேளையும் நன்றாகத் தான் சாப்பிடுகிறேன். பிறகு எப்படி ரத்தச்சோகை வரும்? இந்த அவதிகளுக்குத் தீர்வு என்ன? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன் ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் … Read more

குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group – 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தூக்கிலிடுவதை விட வலி குறைந்த தண்டனைக்கு… மாற்று என்ன? | What is the alternative to a less painful punishment than hanging?

புதுடில்லி: துாக்கிலிடுவதைத் தவிர, மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் நிபுணர் குழுவை அமைக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது. ‘மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கிலிடுவது வலி நிறைந்த செயல்பாடு. அதனால், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது. நேற்று இந்த வழக்கு … Read more

Kawasaki Eliminator – க்ரூஸர் ரக கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக் அறிமுகம்

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தைக்கு வந்துள்ள கவாஸாகி நிறுவனத்தின் எலிமினேட்டர் 400 தற்பொழுது ஜப்பானில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளதால் இந்திய சந்தைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம். குறிப்பாக ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜப்பானில் விற்பனையை துவங்கி சில வருடங்களுக்குள்ளே கவாஸாகி  தனது க்ரூஸர் ரக மாடலை விற்பனைக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது. Table of Contents Kawasaki Eliminator 400 எலிமினேட்டர் 400 சிறப்புகள் கவாஸாகி எலிமினேட்டர் 400 விலை Kawasaki Eliminator … Read more

ஷெபாஸ் Vs இம்ரான்: அதலபாதாளத்தில் பொருளாதாரம்… வன்முறைக்காடான பாகிஸ்தான் – என்ன நடக்கிறது?!

அரசியல், பொருளாதாரத்தில் ஸ்திரமற்ற தன்மைகளால் திணறிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானில், தற்போது சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைதுசெய்ய பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது ஷெபாஸ் ஷெரீப் அரசு. இதனால் இம்ரானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களை நாட்டின் இரு பெரும் தலைவர்களும் டீலில் விட்டு விட்டு, தங்களது சுயலாபத்துக்காக மோதிக்கொண்டிருப்பது உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. பழிவாங்கிய ஷெபாஸ்! உலகக் கோப்பையை வென்றெடுத்த கிரிக்கெட் நாயகன் இம்ரான் கானுக்கு … Read more

மகிழ்ச்சியில் திளைக்கும் ரொனால்டோ! காரணம் இதுதான்..வெளியிட்ட புகைப்படங்கள்

போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தேசிய அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். ரொனால்டோ சவுதி அரேபியாவின் கிளப் அணியான அல் நஸரில் விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மூன்று போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக அப்ஹா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்தார். @Cristiano முன்னதாக கடந்த மாதம் அல்-வெஹ்டா அணிக்கு எதிராக ரொனால்டோ 4 கோல்கள் அடித்து மிரட்டினார். ஐரோப்பா கோப்பை இந்த நிலையில், ஐரோப்பிய கால்பந்து தொடருக்கான தகுதிப்போட்டிகளில் பங்கேற்க … Read more

உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.56 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா?.. ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..24ல் தீர்ப்பு

சென்னை :  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொதுச்செயலாளர் தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று யுகாதி பண்டிகை | Goat and poultry sales are in full swing today

மாலுார் : யுகாதி பண்டிகைக்காக மாலுார் சிக்க திருப்பதியில் நேற்று ஆடுகள், கோழிகள் விற்பனை ஜோராக நடந்தது. கன்னட புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, மாலுார் சிக்க திருப்பதியில் சந்தை அமைக்கப்பட்டது. இந்த சந்தைக்கு கோலார், பங்கார்பேட்டை, முல்பாகல், பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி. தமிழகத்தின் ஓசூர், கிருஷ்ணகிரி, பேரிகை, ஆந்திராவின் மதனபள்ளி, சித்துார் ஆகிய இடங்களில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள்,செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. குட்டி ஆடு 3,000 ரூபாய் முதல் பெரிய ஆடுகள் 45 … Read more