திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. புனித பெரிய அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகள், 119 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அரசு சார்பில் நடக்கும் நிகச்சியில் பங்கேற்று இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் திருச்சி, திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு செல்கிறார். திருச்சிக்கு செல்லும் முதலமைச்சர் அரசு சார்பில் நடக்கும் நிகச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நண்பர் இறந்த சோகத்தால் கொத்தனார் தற்கொலை | Mason commits suicide due to grief over friends death

வில்லியனுார், : நண்பர் இறந்த சோகத்தால் கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். . வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை கப்பகார வீதியை சேர்ந்தவர் கலிவரதன்,68; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி,54; கொத்தனார். இருவரும் இணை பிரியா நண்பர்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியின்றி அவதிப்பட்டு வந்த கலிவரதன் கடந்த 18 ம் தேதி இரவு 10:30 மணிக்கு, வீட்டு தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து … Read more

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க… இவற்றை பின்பற்றுங்கள்!

வாழ்நாள் முழுக்க உடலுக்குத் தேவையானதை உற்பத்தி செய்து, தேவையில்லாதவற்றை வெளியேற்றும் உடலின் அதிசயங்கள் சிறுநீரகங்கள். நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளான சிறுநீரகங்கள், ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருள்களை பிரித்து, சுத்திகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுகின்றன. பொதுவாக, நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன. உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறது. சிறுநீரகக் கல் சிறுநீரகத்தில் கல்! … Read more

மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு கிடைத்த பேரிடி: 11 ஆண்டுகளில் முதல் முறை

மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக சீசன் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து சதவீத கட்டண உயர்வு வயது வந்தோருக்கான சீசன் டிக்கெட்டுகளுக்கான ஐந்து சதவீத கட்டண உயர்வுக்கு ரசிகர்கள் ஆவேசமாக அணி நிர்வாகத்தை கண்டித்துள்ளனர். இதே வேளை, அர்செனல் அணி நிர்வாகமும் 2023-24க்கான சீசன் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால், இதர செலவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மான்செஸ்டர் … Read more

இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று செல்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழா நாளை (22-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,791,513 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,791,513 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,755,280 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,479,503 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,824 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 21 முதல் 26 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ஒட்டுமொத்த உலகமும் துணை நிற்கிறது: உக்ரைனில் ஜோ பைடன் ஆவேசம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். போலந்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் தொடர்பில் அறிவிப்பு வெளியான நிலையில், உக்ரைன் பயணம் குறித்து வெள்ளைமாளிகை திட்டவட்டமாக மறுத்தது. @AFP இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விமானத்தில் வாஷிங்டனில் இருந்து போலந்துக்கு புறப்பட்டார். போலந்து தலைநகர் வார்சாவில் அவரது விமானம் … Read more

பிப்ரவரி 21: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 276-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 276-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.