ரெய்டில் சிக்கிய 11 கிலோ தங்கம்; அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து கடத்தல்! – திருச்சியில் பரபரப்பு

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளிடமிருந்து சோதனை செய்யும்போது, அடிக்கடி கடத்தல் தங்கம் சிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. இந்த நிலையில், ‘செப்டம்பர் 2-ம் தேதி திருச்சிக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக’ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், சுங்கத்துறையினர் மற்றும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அலர்ட் ஆகியுள்ளனர். அதையடுத்து மலேசியாவிலிருந்து வந்த … Read more

அடுத்த சீசனிலும் சிஎஸ்கே கேப்டன் தோனி

மும்பை: ஐபிஎல் யின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற ’மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஇஓ காசி … Read more

தமிழகத்தில் 15%க்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 15%க்கும் குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளர் . பொதுமக்கள் தயங்காமல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Doctor Vikatan: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதிரி மாறும் பீரியட்ஸ்… ஸ்ட்ரெஸ்தான் காரணமா?

Doctor Vikatan: எனக்கு வயது 27. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சுழற்சி ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சிலமுறை ப்ளீடிங் குறைவாக, 3 நாள்களோடு முடிந்துவிடுகிறது. சிலமுறை ஒரு வாரம் நீடிக்கிறது. எனக்கு ஸ்ட்ரெஸ்ஸும் அதிகம். அதுவும் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் ஒரு பெண் இப்போதுதான் பூப்பெய்தியிருக்கிறார்…. 13-14 வயதிருக்கும் என்ற நிலையில் அவருக்கு ரத்தப்போக்கு குறைவாக இருக்கலாம். அதுவே … Read more

மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைத்த விவகாரம்: மேலும் 2 பேர் கைது

கடலூர்: கடலூரில் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைத்த விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி தனசேகரனின் தம்பி மதிவாணன் மற்றும் திருவெறும்பூரைச் சேர்ந்த மௌலிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால்: `படிப்பில் என் மகளை முந்துவதா?’ – குளிர்பானத்தில் விஷம் வைத்து பள்ளி மாணவனை கொன்ற பெண்

காரைக்காலை அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர்கள் ராஜேந்திரன் – மாலதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண்ணும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ராஜேந்திரன் காரைக்காலில் நியாய விலை கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். ராஜேந்திரனின் இரண்டாவது மகன் பாலமணிகண்டன். நேரு நகரிலுள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இவன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள துடிப்பான சிறுவனாகவும் இருந்துள்ளான். .இந்நிலையில் பள்ளியில் ஆண்டு … Read more

என் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்தார்! சுவிஸில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணின் புகார் குறித்து பிரசாந்த் விளக்கம்

சுவிஸில் வசிக்கும் இலங்கை தமிழ்ப்பெண் கொடுத்த புகார் தொடர்பில் நடிகர் பிரசாந்த் விளக்கம். இரு தரப்பு புகார் குறித்தும் காவல்துறை விசாரணை நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பண மோசடி புகார் கொடுத்துள்ள நிலையில் பிரசாந்த் தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை­யைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலைய ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர், நடிகர் பிரசாந்த் தன்னிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாக வாய்மொழி புகார் ஒன்றை சென்னை … Read more

சென்னையில், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு

சென்னை: சென்னையில் மெரீனா, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் இன்று நடைபெறுவதையொட்டி சென்னையில்  15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

“ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” கேரளாவில் இன்று துவக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபலமான “ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர்” படகு போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஒலிம்பிக்ஸ் ஆன் வாட்டர் என்று அழைக்கப்படும் 68வது படகு பந்தயப்போட்டி ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நடைபெற உள்ளது.  20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்க உள்ள இந்தப் போட்டியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படகுப் பந்தயப் போட்டி நடைபெறாததால், இதனை நேரில் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக்கூடாது: லஞ்சஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக்கூடாது என்று லஞ்சஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2 ஊழல் வழக்குகளை ரத்துசெய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.