தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாகர்கோவில்: தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே இந்நிகழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.

“வைகோ குறித்து கேட்டபோது திருமா கடந்துபோனது வருத்தமளிக்கிறது!" – மதிமுக அறிக்கை

`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் நெறியாளர், ம.தி.மு.க தலைவர் வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்டபோது, அதை கடந்து போனது வருத்தமளிக்கிறது’ என, ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வைகோ நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா, இந்த நேர்காணலில் ஈழப்பிரச்னைக் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன … Read more

இளவரசர் ஹரியும் மேகனும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இவர்தான் காரணம்: பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கும் பெண்

இளவரசர் ஹரியும் மேகனும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட இளவரசர் வில்லியம்தான் காரணம் என பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் இளவரசர் ஆண்ட்ரூவின் தோழியாகிய ஒரு பெண். இளவரசர் வில்லியமுக்கு மகிழ்ச்சி இல்லை இளவரசர் வில்லியமும் கேட்டும், கென்சிங்டன் மாளிகையிலிருந்து சற்று ரிலாக்ஸ் ஆக வாழ்வதற்காக விண்ட்ஸர் எஸ்டேட்டுக்கு குடிபெயர்ந்தார்கள். ஆனால், அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார் இளவரசர் ஆண்ட்ரூவின் தோழியாகிய Lady Victoria Hervey. இளவரசர் ஆண்ட்ரூவை காலி செய்ய திட்டம்  ஆகவே, இளவரசர் ஆண்ட்ரூ … Read more

சார்பட்டா 2 : இரண்டாவது சுற்றுக்கு ரெடியான ஆர்யா

ஆர்யா நடிப்பில் 2021 ம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்யா தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட🥊 Round 2️⃣#Sarpatta2 விரைவில்😎😍😍 A @beemji film @officialneelam #TheShowPeople @NaadSstudios #JatinSethi @kabilanchelliah @pro_guna @gobeatroute pic.twitter.com/z00LlbFq5B — Arya … Read more

காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும்

புதுச்சேரி: ‘காரைக்கால் – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் தாமதம் என்று கூறியுள்ளார்.

குஜராத் டெஸ்ட்: ஒன்றாக பார்வையிடும் இந்திய -ஆஸி., பிரதமர்கள் | India-Aussies to watch Test cricket together in Gujarat Prime Ministers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் குஜராத்தில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தினை பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அப்லாபானிசும், ஒன்றாக ரசித்து பார்க்க இருக்கின்றனர். அரசு முறைப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அப்லாபானிஸ் தனது நாட்டு வர்த்தககுழுவுடன் இந்த வாரம் இந்தியா வருகை தருகிறார். அப்போது பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் மார்ச்.8-ம் தேதி குஜராத் செல்லும் ஆஸ்திரேலிய பிரதமர் அங்கு ஹோலி … Read more

குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தாய்! – குடும்பத் தகராறில் விபரீத முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் மனைவி அம்மு (33). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, சுஜி (16), ரேண்டி ஆர்டன் (12), மாரன் (10), சுவிக்‌ஷா (7), பீஸ்மர் (4) என ஐந்து குழந்தைகள். அம்மு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கூலி வேலை எனக் கிடைக்கின்ற கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்திவந்திருக்கிறார். அடிக்கடி சமையல் வேலைகளுக்குச் … Read more

துருக்கி-சிரியா பூகம்பத்தில் உயிர் தப்பிய 10 வயது சிறுவனை கட்டிப்பிடித்த ரொனால்டோ!

போர்ச்சுகல் கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), துருக்கி பூகம்பத்தில் உயிர் தப்பிய 10 வயது சிறுவனை கட்டிப்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ர் (Al Nassr) அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கடந்த மாதம் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் தந்தையை இழந்த சிறுவனை சந்தித்தார். சிறுவனின் ஆசை சமூக ஊடகங்களில் சிறுவனை அடையாளம் காண உதவுமாறு கேட்ட, பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் சவுதி இயக்குநர்கள் … Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிக்கத்துவங்கிய அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் “எந்தெந்த ரயில்கள் எந்தெந்த நடைமேடையில் வந்துசேரும் அல்லது புறப்படும்” என்ற குரல் அறிவிப்பு இன்று முதல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக குரல் அறிவிப்பு ஏதும் இல்லாத ‘சைலன்ட் ஜோன்’-னாக மாற்றும் முயற்சியை தென்னக ரயில்வே கடந்த 26-2-2023 முதல் அறிமுகம் செய்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ளது போல் பெயர்பலகைகள் மூலமும், பிரெய்லி வழிகாட்டி தகவல் பலகைகள் … Read more

தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்!

மும்பை: தென்னாப்பிரிக்காவின் டி20 அணி கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டனாக இவர் நியமிக்கப்படிருந்தார்.