தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவில், கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட உத்தரவில், கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக

சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு சிதம்பரம் மனைவி சொத்து முடக்கம்| Sharada Finance Company fraud case, Chidambarams wifes assets are frozen

புதுடில்லி, சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் பலன் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி உள்ளிட்டோருக்கு சொந்தமான 6.30 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக, அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது. மேற்கு வங்கம், அசாம், ஒடிசாவில், சாரதா சிட் பண்ட் என்ற பெயரில் 2013 வரை நடந்து வந்த நிதி நிறுவனம், மிகப் பெரிய பண முறைகேட்டில் ஈடுபட்டது. மக்களிடம் இருந்து 2,459 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், 1,983 கோடி ரூபாய் பணம் திருப்பிக் … Read more

ஒன் பை டூ

சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவுத் தலைவர், தமிழக பா.ஜ.க “வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார். எங்கள் அமைப்பு இதுவரை எந்த வன்முறையிலும் ஈடுபட்டதாக ஒரு வரலாறும் கிடையாது. ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு காரியத்தைச் சாதித்த செயலை பா.ஜ.க ஒருபோதும் செய்ததில்லை. ஆனால், இந்திரா காந்தி படுகொலையின்போது, சீக்கியர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்… அதற்கு இதுவரை குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பையாவது கேட்டிருக்கிறதா காங்கிரஸ்… குஜராத் கலவரத்தில், தவறு செய்த அனைவருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தது அன்றைய குஜராத் முதல்வர் … Read more

ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்கும்! போலந்து அதிரடி முடிவு

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த ஆண்டு சூன் 26ஆம் திகதி 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால், அந்நாட்டு அரசு பிரம்மாண்டமான முறையில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மற்றும் அதற்கு … Read more

பிப்ரவரி 04: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 259-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 259-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீட் தேர்வுக்கு தயாராகி வந்தவர் 6வது மாடியில் இருந்து விழுந்து பலி| A person who was preparing for the NEET examination fell from the 6th floor and died

கோட்டா, ராஜஸ்தானில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 20 வயது மாணவர், விடுதியின் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இஷான்ஷு பட்டாச்சார்யா. இவர், ராஜஸ்தானின் கோட்டாவில் தங்கியிருந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற பல்வேறு பயிற்சி மையங்கள், கோட்டா நகரில் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் … Read more

அமெரிக்கா மீது பறந்த உளவு பலூன்..திடீர் முடிவெடுத்த வெளியுறவு அமைச்சர்

சீனாவின் உளவு பலூன் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீன பயணத்தை ஒத்தி வைப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உளவு பலூன் அமெரிக்காவின் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியில், சீனாவின் உளவு பலூன் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இந்த விவகாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா – சீனா நாடுகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் திட்டமிட்டிருந்தார். … Read more

கீழ்பாவூர் நரசிம்மர் கோயில்

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.   இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது. தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,769,373 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.69 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,769,373 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,949,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,258,546 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,742 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.