டெக்சாஸில் மீண்டும் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர் கைது

டெக்சாஸில் மீண்டும் பாடசாலை ஒன்றில் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் துப்பாக்கிச்சூடு திங்கட்கிழமை காலை டல்லாஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கிடையில், கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் பள்ளி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகாலை 6:55 மணியளவில் ஆர்லிங்டனின் புறநகர்ப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. … Read more

சாலையில் நாற்று நட்டு பெண்கள் நூதன போரட்டம்! இது வேலூர் மாவட்ட சம்பவம்…

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல் சேரும்  சகதியுமாக காணப்படும்  சாலையில் அந்த பகுதி  பெண்கள் நாற்று நட்டு நூதன போரட்டம் நடத்தினர். இது அம்மாவட்ட ஆட்சியாயர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும் கூட்ரோடு பகுதியில் பாலம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால்  பாலம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில்  நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த பகுதியில் வாகனம் செல்லும் … Read more

சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை.

சென்னை: சென்னை வானகரத்தில் செல்போன் செயலி மூலம் ஐ.டி. ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகார். ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.30 லட்சம் லாபம் ஈட்டலாம் எனக் கூறி மோசடி செய்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு. மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த ஐ.டி. ஊழியர் ரகுராம் அளித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தப்பி ஓடிய நபர்களை விட்டு விடுகின்றனர்; எதிர்க்கட்சியினர் மீது சி.பி.ஐ. பாய்கிறது: காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி, ரூ.13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. இந்நிலையில், அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட்-கார்னர் நோட்டீஸ் உத்தரவை இண்டர்போல் நீக்கியுள்ளது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கு விசாரணையில், எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு … Read more

சொந்த வாகனங்களை பயன்படுத்துவதாக இல்லை… அரசாங்கத்தை அறிவித்த பிரித்தானியர்கள்: வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகள் தங்கள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து விலக்குவதாக வெளியான தகவலுக்கு, விலைவாசி உயர்வை காரணமாக கூறப்படுகிறது. SORN விண்ணப்பம் பிரித்தானியாவில் கடந்த 2022ல் மட்டும் சுமார் 2.7 மில்லியன் வாகனங்கள், இனி பயன்படுத்தப்படாது என அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @shutterstock SORN விண்ணப்பம் அளிக்கப்பட்ட வாகனங்களை எந்த அவசரத்திற்கும் சாரதிகள் பயன்படுத்த முடியாது. மட்டுமின்றி, தனிப்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்த வேண்டும். மேலும், இந்த வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் வரியும் … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணையை கண்காணிக்க உத்தரவு…

மதுரை: புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி-யை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி … Read more

ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு

சென்னை: ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சம்மேளனம் கூறியுள்ளது.

"பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு"…உயர் காவல் அதிகாரிகளுக்கு பறந்த நோட்டீஸ் – பஞ்சாப் அரசு அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், பல்வேறு காவல்துறை அதிகாரிகள் மீது பணி நீக்கம், பணி இறக்கம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த குழு பஞ்சாப் அரசுக்கு பரிந்துரை அளித்தது. அந்த வகையில், முன்னாள் டிஜிபி … Read more