சென்னையில் மயிலாடுதுறையை சேர்ந்த போலி மருத்துவர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் மயிலாடுதுறையை சேர்ந்த போலி மருத்துவர் செம்பியன் கைது செய்யப்பட்டார். போலி ஆவணம் கொடுத்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த செம்பியனை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மத்திய இணையமைச்சர் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்| Suspects attacked Union Chief Ministers house

திருவனந்தபுரம் : கேரளாவில், மத்திய இணையமைச்சர் முரளிதரனின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருப்பவர் முரளிதரன். இவரது வீடு, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்திருப்பதை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு … Read more

10. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 10 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட நான்கு மடங்கு சொத்து மதிப்பு: யார் அந்த ஜாம்பவான்?

கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பை விட நான்கு மடங்கு சொத்துக்களை குவித்துள்ளார் NBA ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் என தெரியவந்துள்ளது. 74 மில்லியன் பவுண்டுகள் ஆறு முறை NBA சாம்பியன் பட்டம் வென்றுள்ள மைக்கேல் ஜோர்டன் தொழில்முறையாக பெற்ற மொத்த ஊதியமானது 74 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. @getty ஆனால் அவர் ஓய்வை அறிவித்த பின்னர், அவரது சொத்துமதிப்பானது ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. Nike, Hanes மற்றும் Gatorade நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களின் … Read more

வார ராசிபலன்: 10.2.2023  முதல் 16.2.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் வேலையில் இருந்த பிராப்ளம்ஸ்லாம் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் வெரி மச் அவசியம். அவசரப்பட்டு பிராமிஸ் செய்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். பிசினஸ்ல பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேணாங்க. கூடுதல் விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் … Read more

இந்தோனேசியாவின் நிலநடுக்கம்: 4 பேர் பலி

பப்புவா: இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கு அடியில் 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவாகியுள்ளது. கடற்கரையை ஒட்டி இருந்த ஓட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

சமையல் எண்ணெய் ஆலையில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி | 7 killed in cooking oil plant gas attack

ஹைதராபாத், ஆந்திராவில் எண்ணெய் ‘டேங்கரை’ சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில், ஏழு பேர் நேற்று பரிதாபமாக பலியாகினர். ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ராகம்பேட்டை கிராமத்தில், சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் இதில் தவறி விழுந்தார். இவரை காப்பாற்ற ஆறு ஊழியர்கள் எண்ணெய் டேங்கரில் இறங்கினர். அப்போது, விஷவாயு தாக்கியதில் ஏழு பேரும் மூச்சுத்திணறி பலியாகினர். இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் … Read more

காதலர் தினத்தில் `பசு அணைப்பு தினம்’ – கலாய்க்கும் நெட்டிசன்கள்… எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்!

உலகெங்கும் `காதலர் தின’மாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 14 தேதியில், `பசு அணைப்பு தினம்’ கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கை பெரும் விமர்சனங்களையும், கடுமையான எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. விலங்குகள் நல வாரிய அறிக்கை இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சர்ச்சை அறிக்கை: கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய விலங்குகள் நலவாரியச் செயலாளர் எஸ்.கே. தத்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பசு நம் இந்திய கலாசாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு … Read more

எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான, ‘கவுன்ட் டவுன்’ இன்று அதிகாலை துவங்கியது.

கியூட் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்| Deadline to apply for cute exam

புதுடில்லி,:மத்திய பல்கலைகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான, ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து பல்கலை மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ் குமார் நேற்று கூறியதாவது: மத்திய பல்கலைகளில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கியூட் நுழைவத் தேர்வு, மே ௨௧ – ௩௧ம் தேதிகளில் நடைபெறும். இதற்காக ‘ஆன்லைன்’ வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று நள்ளிரவு துவங்கியது. மார்ச், ௧௨ வரை விண்ணப்பிக்கலாம். … Read more