ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

தெலுங்கானாவில் திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை வார்டு| Hospital ward turned marriage hall in Telangana

ஹைதராபாத் : தெலுங்கானாவில் திருமண நாளன்று மணமகள் மருத்துவமனையில் இருந்ததால், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, மருத்துவமனை வார்டு திருமண மண்டபமாக மாறி, திருமணம் இனிதாக நடந்தேறியது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. அறுவை சிகிச்சை இங்கு, ஹைதராபாத் அருகே மஞ்சேரியல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக, ஷைலஜா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகள் ஷைலஜா … Read more

SELFIEE: பாக்ஸ் ஆபீஸில் வசூலை இழந்த திரைப்படம்; தொடர் தோல்விகளைச் சந்திக்கும் அக்ஷய் குமார்!

அக்ஷய் குமாரின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’. இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் வெளியான ‘டிரைவிங் லைசன்ஸ்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். ராஜ் மேத்தா இயக்கிய இத்திரைப்படத்தில் இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். Selfiee movie மலையாளத்தில் வசூல் சாதனை படைத்த இப்படம், பாலிவுட்டிலும் வசூல் சாதனை படைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் படம் ரிலீஸாகி மோசமான வசூலை ஈட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் வெளியான இப்படம் முதல் நாளில் இரண்டரை கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கின்றது. பாலிவுட் … Read more

அமெரிக்காவில் தீவிரம் அடையும் ஜாம்பி போதைப்பொருள்! உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம்… மருத்துவர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவில்  ஜாம்பி போதைப்பொருள் என்ற போதைப்பொருளால் உலகம் முழுவதும் தீவிர பாதிப்புக்களை ஏற்படுத்தும புதிய போதைப்பொருள்  அமெரிக்காவில் புதிதாக போதைப் பொருள் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.  அதன் பெயர் டிரான்ஸ் (tranq) அல்லது சைலாசின்(Xylazine). ஆகும்  இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, மனிதர்கள் மிருகங்களை போல் நடந்துகொள்கிறார்கள்.  Zombie Drug   இதனால் இதனை ஜாம்பி போதைப்பொருள் ( Zombie Drug) என அழைக்கப்படுகின்றது.  இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட மருந்தாகும். இதனை … Read more

இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தகவல்…

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதியுடன் கெடு முடிவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், பின்னர், ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி 28ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து … Read more

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வு நிறைவடைந்தது

சென்னை: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வு நிறைவடைந்தது. சென்னையில் 32 மையங்கள் உள்பட 20 மாவட்டங்களில் 186மையங்களில் குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வு நடைபெற்றது. காலையில் தமிழ் தகுதித் தேர்வு தாமதமாக நடந்த நிலையில் இரண்டாம் தாள் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கியது. பதிவெண் வரிசையில் இருந்த வேறுபாட்டால் காலையில் வினாத்தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு: தமிழக அரசு திரும்பப் பெற்றது| Writ Petition against NEET Examination

புதுடில்லி: ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு எதிராக முந்தைய அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த, ‘ரிட்’ மனுவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது. எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில், 2017 – 18ல் அறிவித்தது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு, … Read more

எடப்பாடி வசமான அதிமுக; ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க, எடப்பாடி வசமானது. ஓ.பி.எஸ். இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறிவருகின்றது. இதற்கிடையில், மக்களிடம் நீதி கேட்கப்போவதாகவும், அதற்கான வேலைகளைக் கூடிய விரைவில் தொடங்கப்போவதாகவும் ஓ.பி.எஸ் நேற்று தெரிவித்தார். இத்தகைய நெருக்கடியான சூழலில், ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட அரசியல் … Read more

நடிகர் விஜயை வைத்து உலக சாதனை படைத்த 18 வயது இளம்பெண்!

கேரளாவில் இளம்பெண்ணொருவர் நடிகர் விஜயை படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். விஜய் ரசிகை கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம்பெண் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். அவர் மீதான அன்பின் வெளிப்பாடாக விஜய்யின் உருவப்படத்தை ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவைப் பயன்படுத்தி அப்படியே வரைந்துள்ளார். உலக சாதனை ஒரு மணி நேரம் 56 நொடிகளில் 22க்கு 28 இன்ச் என்ற அளவில் அவர் வரைந்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். Asian book … Read more

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நிலா திருவிழா…

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட 30 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில்,  3 நாட்கள் நிலா திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் பிப் 28ம் தேதி  தேசிய அறிவியல் தினம், கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மத்தியஅரசு அறிவியல்பூர்வமான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு வரும் 28ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட … Read more