மளிகைக் கடைக்காரரின் பில் போல் பட்ஜெட் உள்ளது: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

டெல்லி: மளிகைக் கடைக்காரரின் பில் போல் பட்ஜெட் உள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். உண்மையான, நேர்மையான குறிக்கோள்கள் குறித்து வெளிப்படுத்துவதே சிறந்த பட்ஜெட் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலிலிருந்து அதானி வெளியேறினார்| Adani drops out of Asias richest list

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானி அப்பட்டியலில் இருந்து வெளியேறினார். அதானி நிறுவன பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். பிறகு மிக நீண்ட காலம் 3வது இடத்தில் இருந்தார். இச்சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பாக் ரிசர்ச் நிறுவனம்அதானி குழும நிறுவனங்கள், குறித்து கடுமையாக விமர்சித்தது ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இதனால், பங்குச்சந்தையில் அதானி … Read more

தன்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட பெண்ணை தேடிக் கொன்ற இளம்பெண்! – `பகீர்' சம்பவத்தின் பின்னணி என்ன?

ஜெர்மனி நாட்டின், மைன்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 23 வயதான இளம்பெண் ஒருவர் காணாமல்போனதாக, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, போலீஸாரால் தேடிவரப்பட்ட அந்தப் பெண், கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காரில் சடலமாக மீட்கப்பட்டார். மர்ம மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், தங்கள் மகள் காணாமல்போனதாகப் புகார் அளித்தவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துவிட்டு, உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் முடிவில், போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், … Read more

டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்தா?

டார்க் சாக்லேட்ஸை ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தான் இவற்றை தயக்கமின்றி பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். உண்மையில் டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானதா? இல்லையா என்ற சந்தேகம் பலரிடையே காணப்படும். டார்க் சாக்லேட் உண்மையில் அதிகமாக எடுத்து கொள்வது தீங்கு விளைவிக்க கூடியவை . தற்போது அவை குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம். ஏன் சாப்பிட கூடாது?  சில டார்க் சாக்லேட்ஸ்களில் ஈயம் மற்றும் காட்மியம் ஆகிய இரண்டு ஹெவி மெட்டல்ஸ் இருக்கின்றன. இவை இரண்டுமே பல … Read more

பிப்ரவரி 3ந்தேதி அண்ணா நினைவுநாள்: அமைதி பேரணியில் கலந்துகொள்ள திமுகவினருக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை: பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணியில்  திமுகவினர் திரளாக பங்கேற்க  வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய தனயன்! தமிழ்வானின் நிரந்தர சூரியன் பேரறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி-3 அன்று நடைபெறும் அமைதிப்பேரணி எத்திசையும் பேரறிஞரின் பேரொளி பரவி இந்தியாவின் இருள் அகலுவதற்கான தொடக்கமாக அமையட்டும்! எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவித்துள்ளதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பழனிசாமி தரப்பில் காலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், பன்னீர் தரப்பும் வேட்பாளரை அறிவித்துள்ளது. பழனிசாமி, பன்னீர் வேட்பாளர்களில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

வீட்டைவிட்டு வெளியேற்றியதால் ஆத்திரம்; 25 ஆண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய நபர்!

மும்பையிலுள்ள கல்பாதேவி பனஸ்வாடியில் வசித்தவர் கீதா விர்கர். சமூக சேவகியான இவர், மகேஷ் விஷ்வநாத் (62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ் மது மற்றும் சூதாட்டத்துக்கு அடிமையாகி இருந்தார். அடிக்கடி கீதாவிடம் மது அருந்த பணம் கேட்டு சித்ரவதை செய்து வந்தார். இதனால் கீதா வீட்டை காலி செய்யும்படி மகேஷிடம் கேட்டுக்கொண்டார். அதனால், மகேஷ் வீட்டைவிட்டு வெளியேறினார். மகேஷும், கீதாவும் 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. திடீரென வீட்டைவிட்டு … Read more

ஜனவரி 4 முதல்… கனேடிய குடியுரிமை தொடர்பில் ஒரு பயனுள்ள செய்தி: வீடியோவும்!

கனடாவில், தற்போது மின்னணு கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மின்னணு வடிவில் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் இது, காகிதத்தில் அச்சிடப்பட்ட சான்றிதழுக்கு ஒரு மாற்றாகும். 2023 ஜனவரி 4ஆம் திகதி முதல், நீங்கள் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தாலோ அல்லது குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தாலோ, குடியுரிமைச் சான்றிதழ் காகித வடிவில் வேண்டுமா அல்லது மின்னணுச்சான்றிதழ் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் என பெடரல் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்பது, … Read more

ஜனவரி மாத ஜி. எஸ். டி. வசூல் ரூ.1,55,922 கோடி

டெல்லி: 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நிலவரப்படி, ஜனவரி மாத ஜி. எஸ். டி. வசூல் ரூ.1,55,922 கோடி என நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. … Read more

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

சென்னை: மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.