பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை கொல்ல திட்டமிட்ட பேஸ்புக் குழு: வெளிவரும் முழு பின்னணி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை கத்தியால் தாக்கி கொல்ல திட்டமிட்ட பேஸ்புக் குழு உறுப்பினர்கள் மூவரை குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. பீங்கான் கத்தியால் தாக்க திட்டம் பேஸ்புக் சமூக ஊடகத்தில் Barjols என்ற பெயரில் செயல்படும் குழு உறுப்பினர்களே இந்த தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்தவர்கள். 2018ல் முதல் உலகப் போர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட இமானுவல் மேக்ரானை பீங்கான் கத்தியால் தாக்கி காயப்படுத்த இந்த குழு திட்டமிட்டுள்ளது. @AFP இதில் 66 வயதான Jean-Pierre Bouyer … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,788,478 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,788,478 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,367,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,940,754 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுமிக்கு சூடுவைத்து கொடுமை போக்சோவில் தாய், மகன் கைது| Mother, son arrested in pocso case of beating girl

புதுடில்லி, புதுடில்லியில், 7 வயது சிறுமியை தத்தெடுத்து கொடுமைப்படுத்திய தாயையும், மகனையும், போலீசார் ‘போக்சோ’ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். புதுடில்லியில் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர், மத்திய அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். தன் மகனுடன் வசித்து வந்த இவர் உறவினரின் 7 வயது மகளை தத்தெடுத்தார். இச்சிறுமியை, தாயும், மகனும் தினமும் அடித்து துன்புறுத்தியதுடன், சூடு வைத்தும் கொடுமைப் படுத்தினர். இதனால் ஏராளமான தழும்புகள், காயங்களுடன் பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் வகுப்பாசிரியை … Read more

டிரக்கில் மரக்கட்டைகளுக்குள் ஒளிந்திருந்த புலம்பெயர்ந்தோர்., மூச்சடைத்து 18 பேர் மரணம்

பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் 18 புலம்பெயர்ந்தோர் இறந்து கிடப்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. 18 புலம்பெயர்ந்தோர் மரணம் பல்கேரியாவில் தலைநகர் சோபியா அருகே கைவிடப்பட்ட டிரக்கில் குறைந்தது 18 பேர் மூச்சடைத்து இறந்து கிடந்ததாக பல்கேரிய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப்.17) தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, டிரக் சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்றது. அந்த டிரக்கீழ் மொத்தம் 40 பேர் மரக்கட்டைகளின் கீழ் மறைந்திருந்ததாக பல்கேரிய உள்துறை அமைச்சகம் கூறியது. Representative Image RTE ஆபத்தான நிலையில் 8 பேர் உயிர் பிழைத்தவர்கள் … Read more

இந்தியாவுக்கு அருணாச்சல் சொந்தம் அமெரிக்க செனட்டில் அதிரடி தீர்மானம்| Arunachal belongs to India Action resolution in the US Senate

வாஷிங்டன்,’அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறுவதையும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டிக்கிறது’ என, அமெரிக்க செனட் சபையில் அதிரடியான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, நம் அண்டை நாடான சீனா உரிமைக் கோரி வருகிறது. அருணாச்சல் எல்லையில் அடிக்கடி சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவுவதுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. எல்லைக்கு அருகே சாலை உள்ளிட்ட … Read more

கடைசி மணி நேரத்தில் களத்தில் குதித்த கத்தார் கோடீஸ்வரர்கள்: கைமாறும் மான்செஸ்டர் யுனைடெட்

சிவப்பு பேய்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை கடைசி கட்டத்தில் கத்தார் கோடீஸ்வரர்கள் முன்னெடுத்துள்ளனர். கத்தார் கோடீஸ்வரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகத்தை தங்கள் பொறுப்பில் கொண்டுவரு,ம் பொருட்டு கத்தார் கோடீஸ்வரர்கள் 5 பில்லியன் பவுண்டுகள் தொகையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @PA கத்தாரின் முதன்மை வங்கி ஒன்றின் தலைவரும் வாழ்நாள் மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகருமான Sheikh Jassim Bin Ham Al Thani என்பவரே … Read more

பி.பி.சி., நிறுவன வருமான கணக்கு ஒத்துப்போகவில்லை| BBC, corporate income statement inconsistent

புதுடில்லி, பி.பி.சி.,யின் பல்வேறு துணை நிறுவனங்களால் காட்டப்பட்டுள்ள வருமானம் மற்றும் லாபத்துக்கும், இந்நிறுவனம் இந்தியாவில் செயல்படும் அளவுக்கும் ஒத்துப்போகவில்லை என, வருமான வரித் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., ஊடக நிறுவனம், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், பி.பி.சி., நிறுவனம் ௨௦௦௨ல் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்தும், அப்போதைய முதல்வர் மோடி குறித்தும் விமர்சித்து, இரு ஆவணப்படங்களை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதுடில்லி மற்றும் மும்பையில் … Read more

நிலநடுக்கத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… காப்பகத்தில் நேர்ந்த கொடூர சம்பவம்

துருக்கியை மொத்தமாக உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய சிரியா குடும்பம் ஒன்று, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 பேர்கள் கொண்ட சிரியா குடும்பம் துருக்கி மற்றும் சிரியாவின் முக்கிய பகுதிகளை உருக்குலைத்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 41,000 மக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரம் மக்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். @AFP இந்த நிலையில் 5 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர்கள் கொண்ட சிரியா … Read more

லியோனல் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனாவிற்கு செல்வாரா? தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி சொன்ன தெளிவான பதில்

லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தனது மகன் எதிர்காலம் குறித்த புதிய தகவலை வழங்கினார். 2022 FIFA உலகக் கோப்பையை வென்ற லியோனல் மெஸ்ஸி மீண்டும் முன்னாள் கிளப் பார்சிலோனாவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெளிவாக கூறியுள்ளார். என்ன நடந்தது? சீசனின் முடிவில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒப்பந்தம் இல்லாமல் மெஸ்ஸியின் எதிர்கால நகர்வு தீர்மானிக்கமுடியாமல் உள்ளது. Getty Images மெஸ்ஸி தனது முன்னாள் கிளப் பார்சிலோனாவிற்குத் திரும்பலாம் என்று ஊகங்கள் … Read more