டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு: சானியா மிர்சா முக்கிய அறிவிப்பு

துபாய்: டென்னிஸ் வாழ்கையில் இருந்து ஒய்வு பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெளியிட்டுள்ளார். கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்று தந்தவர் வீராங்கனை சானியா மிர்சா. 39 வயதான அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாளிகை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் இஷான் மிர்சா என்ற மகனும் உள்ள உள்ளார். இந்நிலையில், துபாயில் அடுத்த மாதம் நடைபெற … Read more

போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக நகர செயலாளர் மீது புகார்..!!

திண்டுக்கல்: போலி பத்திரம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக பாஜக நகர செயலாளர் சரவணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நகர செயலாளர் சரவணன் மீது கொடைக்கானலை சேர்ந்த ராஜு (76) என்பவர் திண்டுக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மெக்சிகோ: போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது; வன்முறையில் 29 பேர் பலி… தொடரும் பதற்றம்!

மெக்சிகோ போதைப்பொருள் கடத்தலுக்கு பிரபலமான நாடு. அங்கிருந்துதான் உலகின் பல நாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் மெக்சிகோவில் சினாலாவோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராக செயல்பட்டு வருபவர் ஜோகின் குஸ்மான் (Joaquin Guzman) என்கிற எல் சாப்போ (El Chapo). இவன் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்படுகிறான். அவனை அமெரிக்கா காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். ஓவிடியோ குஸ்மான் அவன் கையாண்டு … Read more

இந்த பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடவே சாப்பிடாதீங்க! பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்

பொதுவாக பூண்டு ஒரு சிறந்த உணவாக மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது . இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது உடலுக்கு ஒரு சில பாதிப்புக்களை ஏற்படுத்தி விடும். அந்தவகையில் தற்போது இதனை யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.   அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே அவர்கள் தவிர்க்க வேண்டும்.  பலவீனமான வயிறை … Read more

இந்திய கிரிக்கெட் அணி : புதிய தேர்வு குழு உறுப்பினர்களை அறிவித்தது பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் தேர்வுக் குழுவின் புதிய உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக் குழு தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி சரியாக விளையாடாததை அடுத்து தேர்வுக் குழு கலைக்கப்பட்டது. இதனை அடுத்து 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்து நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. 600 பேர் … Read more

புதிதாக பணியில் சேரும்போது ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும். புதிதாக பணியில் சேரும்போது ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

`பதின் வயதில் ரோமியோ – ஜூலியட் படத்தில் நிர்வாணமாக நடிக்க வைத்தனர்’ – 70 வயதுகளில் நடிகர்கள் புகார்

கடந்த 1968-ம் ஆண்டு வெளியான Romeo and Juliet திரைப்படம் அப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹிட். நான்கு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்ற இப்படத்தில் நடித்த நடிகரும், நடிகையும் புகழின் உச்சத்தை தொட்டனர். அந்தப் படத்தில் ரோமியோ மற்றும் ஜூலியட்டாக நடித்தவர்கள் ஒலிவியா ஹஸ்ஸி மற்றும் லியோனார்ட் வைட்டிங்.  Romeo and Juliet திரைப்படக் காட்சி! இயக்குநர் பிரான்கோ ஜெஃபிரெல்லி இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கையில், ஒலிவியாவிற்கு 15 வயது, லியோனார்ட் வைட்டிங்கிற்கு 16 வயது. இவர்களிடம், `நெருக்கமான … Read more

மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்த ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்த தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னையில் புத்தக காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக காட்சி நடைபெறுகிறது. புத்தக காட்சியில் 1,000 அரங்குகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். புத்தக காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூரின் பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தக காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய பிரத்யேக … Read more

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு காரணமாக சுமார் 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு காரணமாக சுமார் 570க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலநிலை, உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் சரிந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது; 60 குடும்பங்கள் வெளியேறின. வீடுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக பாதுகாப்பு கருதி 29 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"ஆஃப்கானில் போர் பயிற்சியின் போது 25 தாலிபன்களை கொன்றேன்" – இங்கிலாந்து இளவரசர் ஹாரி

சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன்னுடைய வாழ்வை சுய சரிதையாக எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் தன் போர் பயிற்சிகளை, 20 ஆண்டுகளாக போர் நடந்துக் கொண்டிருந்த ஆஃப்கானில் மேற்கொண்டதாக குறிப்பிட்டுக்கிறார். போர் பயிற்சியின் போது 25 தாலிபன் முஜாஹிதீன்களை கொன்றதாக குறிப்பிட்டிருந்த அவர், இது தொடர்பாக ஒரு பேட்டியில், “தாலிபன்களை வெட்டி வீசவேண்டிய சதுரங்க காய்களாக தான் அப்போது பார்த்தேன். அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இளவரசர் ஹாரின் இந்த பேச்சு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனத்துக்குள்ளானது. … Read more