தூத்துக்குடியில் 10ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 10ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை மூடவும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

`வாரிசு', `துணிவு' FDFS எப்போது? எத்தனை தியேட்டர்களில் வெளியாகின்றன? நள்ளிரவுக் காட்சிகள் உண்டா?

ஜனவரி 11-ல் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ என இரண்டு படங்களும் வெளியாவதால், இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்நிலையில் தியேட்டர்களில் ‘துணிவு’ நள்ளிரவு ஒரு மணி காட்சியாகத் திரையிடப்படுகிறது எனவும், ‘வாரிசு’ அதிகாலை 4 மணிகாட்சியாக திரையிடுகிறார்கள் என்றும் இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ‘துணிவு’ படத்துக்கு ‘வாரிசு’ படத்தைவிட அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் இப்போதே தொடங்கப்பட்டு, நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டு … Read more

தமிழ்நாடு விவகாரம்: கவர்னருக்கு கண்டனம் – கமல் கருத்துக்கு வரவேற்பு! கே.எஸ்.அழகிரி

வேலூர்:: தமிழ்நாடு குறித்து கவர்னர் ஆர்என்.ரவி பேசிய கருத்து கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கவர்னரின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே வேளையில் கமல்ஹாசனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார். வேலூர் சத்துவாரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி,  தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை வேறு கலாச்சாரத் தில் உள்ளனர்.  கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது. தமிழகம் என சொல்ல வேண்டும் என கூறுகிறார். … Read more

அதிமுக தேர்தலில் வென்று பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார்: முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: அதிமுக தேர்தலில் வென்று பழனிசாமி பொதுச்செயலாளராக வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொண்டர்கள் ஆதரவு உள்ளவர்கள் தனக்கு உள்ள ஆதரவு பற்றி வெளியே தெரிவிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.

"ஆசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை… அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு உதாரணம்" – ஓபிஎஸ்

அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதன் காரணமாக சம்பளம் கிடைக்காத ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியருக்கு கல்வி செல்வத்தை போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை, ஒவ்வொரு மாதமும் கடைசிப் பணி நாள் என்று அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து … Read more

கிழக்கு திசை காற்று மாறுபாடு 15ந்தேதி வரை குளிர்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக 2 நாள் மழை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும்  15ந்தேதி வரை குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. அதனப்டி,  இன்னும் 8 தினங்கள் வரை இரவில் குளிர் நீடிக்கும்- அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் லேசான மழைக்கு வாயப்பு இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை … Read more

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் அரசாணை வெளியீடு..!!

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறுகிறது.

உத்தரகாண்ட்: `நடுத்தெருவில் 4,000 குடும்பங்கள்… கொதித்த உச்ச நீதிமன்றம்' – நடந்தது என்ன?!

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: உத்தரகாண்டில் ஹல்த்வானி நகரில் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகள் இருக்கின்றன. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. மக்கள் தொகை 50,000க்கும் மேல் இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், வங்கி, மசூதிகள், கோயில்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த நிலம் ரயில்வேயிக்குச் சொந்தமானது என்றும் 29 ஏக்கர் அளவுக்கு ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்தே மக்கள் தங்கள் வீடுகளை இங்குக் கட்டியுள்ளனர் … Read more

12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சென்னை: அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து  வரும் மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு  மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.  இதையடுத்து, மாணாக்கர்கள் தேர்வு கட்டணம் மற்றும் ஹால் டிக்கெட் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இந்த … Read more

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி பெருங்காய ஆலை கண்டுபிடிப்பு..!!

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி பெருங்காய ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக பெருங்காயம் இருந்தது. தலைமறைவாக உள்ள நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.