சிவகாசி: மனைவியுடன் திருமணம் மீறிய உறவு… இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற கணவர்!

சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. எட்டாக்காப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பட்டாசு ஆலையில், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மனைவி பத்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஒரே பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில், கருப்பசாமியும், பத்மாவும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் இவர்கள்‌ இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கருப்பசாமி இந்நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்துவரும் பத்மாவின் … Read more

வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

திருவனந்தபுரம்: வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என கேரள மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் ஏற்காத பட்சத்தில் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு, மக்கள் பணிகளை ஸ்தம்பிக்க செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த … Read more

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர்கள் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர்கள் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் விவகாரத்தில் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

“இந்துத்துவா சக்திகளுக்கு அந்த தைரியம் இல்லை" – காட்டமான வைகோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்ற கொள்கைக்காக, கோரிக்கைக்காக உண்ணாவிரம் இருந்து உயிர்கொடுத்தார் சங்கரலிங்கம் நாடார். அவரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு என சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா சொல்லவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வித்தியாசம் இல்லாமல் ‘தமிழ்நாடு’ என மூன்று முறை சொல்லி சூட்டப்பட்ட இந்த பெயரை மாற்றும் விதத்தில் ‘தமிழகம்’ என்று அழைக்கலாம் என … Read more

ரூ.1900 கோடியில் மதுரை எய்ம்ஸ் விரைவில் அமையும்! மத்தியஅமைச்சரை சந்தித்த அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1900 கோடி மதிப்பீட்டில் விரைவில் அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதியளித்து இருப்பதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியாயை சந்தித்து பேசினார். அப்போது,  , தமிழக மருத்துவத் துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். தமிழகஅரசு வழங்கிய கோரிக்கை மனுவில், தமிழ்நாட்டின் நீட் … Read more

உபி.யில் நிலவிவரும் கடும் குளிரால் ஒரே நாளில் 25 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடும் குளிரால் ரத்த அழுத்த அதிகரிப்பு மற்றும் ரத்த உறைவதால் ஏற்படும் மாரடைப்பு, மூளை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இன்னொரு மொழி கற்றுக் கொள்வதை தடுக்க வேண்டாம்; ஏனெனில்…”- துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

“தேசியக் கல்விக் கொள்கையில், தமிழை தாய்மொழியாகவும், இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவும் கிடைக்கும். தமிழில் இவ்வளவு பெருமைகள் இருக்கின்றன என்பதை மற்ற மொழிக்காரர்களிடம் சொல்வதற்காக இன்னொரு மொழி கற்றுக் கொள்வதைத் தடுக்க வேண்டாம்” என திருவையாறில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஜி.கே.வாசன் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்ததார். அவர் முக்தியடைந்த நாளில், ஆண்டுதோறும் ஆராதனை … Read more

போகிக்கு தேவையற்ற பொருட்கள் எரிப்பதை தவிருங்கள்! சென்னை மாநகராட்சி – வீடியோ

சென்னை:  தேவையற்ற பொருட்களை போகி பண்டிகை அன்று எரிப்பதை தவிர்க்க வேண்டும் என  சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து வரும் 8 முதல் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம் என்று மாநகராட்சி கூறியுள்ளது, சென்னை மாநகராட்சியில் 13,14ல் பழைய துணி, டயர், ரப்பர், டியூப், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. போகி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த … Read more

5000 மாணவ, மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ, மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.