சென்னை விமானநிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.1.43 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பாங்காக் செல்ல விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் ரூ.8.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்தனர்.

"மேற்கத்திய ஊடகங்களின் சிறு விமர்சனங்களைக்கூட மோடியால் பொறுத்துக்கொள்ள முடியாது" – காங்கிரஸ் தாக்கு!

பிபிசி ஊடக நிறுவனத்தின் அலுவலகங்களில் தொடர்ச்சியாக 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக மத்திய பா.ஜ.க அரசுக்கு ஊடக அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. பிபிசி வருமான வரி சோதனை அந்த வரிசையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவும் தற்போது மோடியையும், பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பிபிசி ஊடக அலுவலகம்மீதான சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா, “மேற்கத்திய அமைப்பின் … Read more

கிருத்திகாவை அவரது விருப்பப்படி உறவினர் வீட்டுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா அவரது உறவினருடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக எழுதித் தந்ததை அடுத்து உறவினருடன் செல்ல கிருத்திகாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.

நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு: பின்னணியில் நீங்கள் இல்லை என்றால்…அமெரிக்காவிற்கு ரஷ்யா சவால்!

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை அழிக்கவில்லை என்பதை அமெரிக்க நிரூபிக்க வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு கடல் வழியாக எரிவாயுவை கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டது. முதலில் இரண்டு கசிவுகள் கண்டறியப்பட்ட நிலையில், இறுதியில் நான்கு கசிவுகளாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த கசிவு தொடர்பாக பல்வேறு கூற்றுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் … Read more

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

டெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விஜய் நாயர், அபிஷேக், சமீர் மகேந்துரு, சரத் பி ரெட்டி, பினாய் பாபு ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 

செல்பி எடுக்க மறுத்த கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்| Prithvi Shaw attacked for denying selfies in Mumbai’s Oshiwara, his friend’s car vandalised

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கிருந்தார். அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரசிகர்களுடன் செல்பி எடுக்க பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிலர் பிரித்வி ஷாவை தாக்கியதுடன், அவரது நண்பரின் காரையும் உடைத்துள்ளனர். இது தொடர்பாக ஓஷிவாரா போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா, மும்பையில் … Read more

தூத்துக்குடி: அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல்பசு; மீட்ட வன அலுவலர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் , ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மத்தியரசு, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக அறிவித்துள்ளது. இங்கு 4,223 வகை கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், அழிந்து வரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. பாம்பனுக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான  560 சதுர கி.மீ. கடல்பகுதி  பரப்பளவில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. கடல் பசுவின் முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்கள் வலையில் … Read more

தலைநகருக்கு மேல் பரந்த 6 ரஷ்ய உளவு பலூன்கள்., சுட்டு வீழ்த்திய உக்ரைன்

தலைநகர் கீவ் மேல் பறந்துகொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் 6 ரஷ்ய பலூன்கள் கீவ் மீது காணப்பட்டதாகவும், பெரும்பாலானவை வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பலூன்கள் பிரதிபலிப்பான்கள் (corner reflectors) மற்றும் உளவு கருவிகளை சுமந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அவை தலைநகரின் மீது எப்போது பறந்தன என்பதைக் குறிப்பிடவில்லை, இருப்பினும் புதனன்று கீவில் … Read more

லால்குடியில் ரூ.8லட்சம் மதிப்புள்ள தடைசெய்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.8லட்சம் மதிப்புள்ள தடைசெய்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த புகையிலை பொருட்களை வைத்திருந்த பக்ருதீன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.