“முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சொத்து விவரங்கள் ஏப்ரலில் வெளியிடப்படும்" – அண்ணாமலை

திருப்பூர் கோவில்வழியில் பாஜக சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், “திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டனர். 2024-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி 400 உறுப்பினர்களுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார். நான் கட்டியுள்ள கை கடிகாரத்துக்கான பில்லை வெளியிட முடியுமா என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்கிறார். இந்த கடிகாரத்தை எங்கிருந்து வாங்கினேன்? எவ்வளவு பணம் … Read more

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக லட்சக்கணக்கில் தயாராகும் லட்டுக்கள்

கன்னியாகுமரி: இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வருகிற ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலைக்கான தயாரிப்புகள் துவங்கி பெரும் அளவில் பரபரப்பாக தயாராகி வரும் நிலையில், மற்ற மாவட்டங்களிலும் ஆஞ்சநேருக்கு பிடித்தமான பிரசாதங்கள் கோவில்களில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாகவும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த … Read more

மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி கடத்தல்; மர்ம நபர்களால் கடும் தாக்குதல் – களேபரமாகும் கரூர் அரசியல்

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19 – ம் தேதி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான திருவிக நேற்று முந்தினம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டார். கரூர் தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை எட்டு பேர் சேர்ந்து கடத்தினர். அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் பெயரை தெரிவித்தனர். அதோடு, அவர்களில் … Read more

உலகளவில் 65.86 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.75 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 63.22 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸியின் அருகில் நின்றபடி எம்பாப்பேவை கிண்டல் செய்த வீரர்! மீண்டும் கிளம்பிய சர்ச்சை

அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினெஸ் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் முகம்பொறித்த குழந்தை பொம்மையை வைத்து கேலி செய்தார். வெற்றி ஊர்வலம் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீரர்கள் பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர். அப்போது மெஸ்ஸிக்கு அருகில் நின்றிருந்த கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் தனது கையில் குழந்தை பொம்மை ஒன்றை ஏந்தியிருந்தார். மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய மார்டினெஸ் ஆனால் அந்த பொம்மையின் முகம் பிரான்ஸ் வீரர் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,675,040 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,675,040 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 658,696,718 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 632,255,513 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,980 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காதலரைப் பார்த்து லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! 15 ஆண்டுக்கு பின் திருமணம் செய்யும் பிரித்தானிய பெற்றோர்

பிரித்தானியாவில் லொட்டரியில் பரிசை வென்ற ஜோடி, 15 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது திருமண செய்ய உள்ளனர். ஒன்றாக வாழ்ந்து வரும் ஜோடி Norwich நகரின் நோர்போல்க் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண் எல்லி லேண்ட். இவர் கார்ல் வார்ட் (43) என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமண நிச்சயம் செய்துகொண்ட இந்த ஜோடி, போதிய பணம் அப்போது இல்லாததால் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனினும், ஒன்றாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இரண்டு … Read more

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், தாராபுரம்

காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அமைந்துள்ளது. ஆஞ்சநேய பக்தரான ஸ்ரீவியாஸராயர் சுவாமி 1460லிருந்து 1530ம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் நாடு முழுவதும் 732 ஆஞ்சநேயர் கோயில்களைக் கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் கோயில். அந்தக் கோயில் கட்டிய இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு ஹனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. 1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க … Read more

டிச.21: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.