ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது?.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை எருக்கஞ்சேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ரவீந்திரன் ராம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு அமலாக்கத் துறை சம்மன்| Dinamalar

புதுடில்லி,:போதைப் பொருள் தொடர்பான பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்குக்கு அமலாக்கத் துறை ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகார் குறித்து சிறப்பு குழு விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பெயர் இடம்பெற்றது; அவரிடமும் விசாரணை நடந்தது. இந்நிலையில், போதைப் பொருள் வழக்கு தொடர்பான பணப்பரிமாற்ற மோசடி … Read more

`நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ. 625 கோடிக்கு மேல் முறைகேடு' லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க கோரிக்கை!

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  சுமார் ரூ.625 கோடிக்கு மேல் லஞ்சமுறைகேடு நடைபெறுகிறது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாய சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி முதல்வர் முதல் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரை மனு அனுப்பியுள்ள தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர.விமலநாதனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலிற்கு ரூ.125 – கட்டாய லஞ்சத்தை நிர்ணயித்து , நிகழாண்டு … Read more

ஓடுபாதையில் மோதிய அமெரிக்க போர் விமானம்: கணநேரத்தில் உயிர் பிழைத்த விமானி: வைரல் வீடியோ

அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதி  விபத்துக்கு உள்ளான நிலையில்,  இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போர் விமானம் விபத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் உள்ள கூட்டு இருப்புத் தளமான கடற்படை விமான தளத்தில் வியாழன் கிழமை அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஓடுபாதையில் மோதி விபத்திற்குள்ளானது. #Breaking New much clearer video, courtesy Kitt Wilder, of STOL … Read more

காலியாக உள்ள கரூர் கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்,  தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீல் இட்ட கவரில்  தாக்கல் செய்ய தேர்தல் அலுவலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், கரூர் மாவட்ட கவுன்சிலர் துணை தலைவராக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.  பின்னர், சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து, அவர்கள்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா … Read more

பார்வையற்றோர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

பார்வையற்றோருக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

டிஜிட்டல் மயமாகும்  மாருதி பிரீசா| Dinamalar

புதுடில்லி, ‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரீசா’ எஸ்.யு.வி., காரில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஒயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே’, ‘ஸ்மார்ட் இன்போடெயின்மென்ட்’ அமைப்பில் ‘ஆண்ட்ராய்டு ஆட்டோ’ இணைப்பு, மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ‘டர்ன் பை டர்ன் நேவிகேஷன்’ என பல முக்கியமான வசதிகளை புதிதாக கொண்டுவந்துள்ளது. இந்த புதிய மாடல் பிரீசா, கடந்த ஜூனில் வெளியிடப்பட்ட நிலையில், இது வரை 1.9 லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக,எலெக்ட்ரிக் சன்ரூப், ஒயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா … Read more

நீதிபதி தஹில்ரமணி மீதான குற்றச்சாட்டு… மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்!

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தில் முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முன்னதாக 2019-ம் ஆண்டில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தமிழக அமைச்சருடன் நெருங்கிய தொடர்பு, சென்னையில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது, சிலை திருட்டு தொடர்பான சிறப்பு பெஞ்சை கலைத்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு … Read more

தினமும் உணவில் கொஞ்சம் கருப்பு மிளகு சேர்த்துகோங்க! உங்க உடம்பில் இந்த அதிசயங்கள் நடக்குமாம்

கருப்பு மிளகு அதிகளவில் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இதில் குறைந்த கலோரிகள், தாதுக்கள், விட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு பல ஆரேக்கிய நன்மைகளை வழங்குகின்றது. அந்தவகையில் கருப்பு மிளகை தினமும் உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.     கருப்பு மிளகு செரிமானத்திற்கு உதவுகிறது, இது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை வெளியிடுகிறது, இது புரதங்களை உடைக்கிறது. … Read more

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பயணம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன்கள் … Read more