மாண்டஸ் புயல் பாதிப்பு எதிரொலி: 2வது நாளாக இன்றும் சென்னை உள்பட 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 14 மாவட்டபள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில், அதன் தாக்கம் இன்றும் தொடரும் என்றும், பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத ந்நிலையில் கனமழை எச்சரிக்கையை … Read more

இன்று பிற்பகலுக்குள் சீரான மின்விநியோகம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு நடக்கிறது. இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆடு வளர்ப்புக்கு ‘ஆப்பு’ வைக்கும் ஆஸ்திரேலியா!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) டிசம்பர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் பெரிய அளவில் பயன்பெறப்போகிறார்கள்’ என்கிற செய்திகள் பரபரக்கின்றன. அதேசமயம், ‘இந்த ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியாதான் பயன் பெறப்போகிறது. இந்திய மக்கள்தொகை கிட்டத்தட்ட 140 கோடி. ஆஸ்திரேலியா மக்கள்தொகையோ வெறும் 3 கோடி. ஆக, இந்தியா என்பது வளமான பெரிய சந்தை என்பதையறிந்தே, தங்கள் நாட்டு உற்பத்தி … Read more

கரையை கடந்தது மாண்டஸ்: சென்னையின் பெரும்பாலான இடங்களில் பவர் கட் – ஏராளமான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நேற்று மாலையே துண்டிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் மின்விநியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. மேலும்  பெரும்பாலான  மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளால், அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல சைதைப்பேட்டை பகுதியில் … Read more

சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை மடிப்பாக்கத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் லட்சுமி(45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!

சென்னை: மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக்கு 40 கி.மீ மேற்கு-தென்மேற்கில் நிலைகொண்டுள்ளது.

சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி| Dinamalar

ஜோத்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சமையல் ‘காஸ்’ சிலிண்டர் வெடித்து, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தானின் ஜோத்பூர்அருகே புங்ரா என்ற கிராமத்தில், சுரேந்திர சிங் என்பவர் வீட்டில் நேற்று திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதற்காக, அவரது உறவினர்கள் நேற்று முன்தினமே அவர் வீட்டில் கூடினர். நேற்று முன்தினம் மதியம் அனைவருக்கும் உணவு தயாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது காஸ் சிலிண்டரில் கசிவு … Read more

மாண்டஸ் புயல்: விழுப்புரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்… போனில் உரையாடிய முதலமைச்சர்!

மாண்டஸ் புயல், புதுவை – ஸ்ரீஹரிகோட்டா இடையே நேற்று இரவு கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்த நிலையில்… மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலையில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் சின்னத்தின் காரணமாக நேற்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கூடிய மழைப்பொழிவு இருந்தது. மாண்டஸ் புயல், கரையை நெருங்க நெருங்க விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் அருகேயுள்ள 19 மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடல் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,656,313 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,656,313 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 652,842,775 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 628,631,597 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,426 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.