கனமழை எச்சரிக்கை வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இன்று விடப்பட்டிருந்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. ‌ இந்நிலையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன.

ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள்

அமெரிக்காவில் ஜெப ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக 22 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நியூயார்க்கில் ஜெப ஆலயங்களுக்கு இருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பொலிஸார், Aquebogue-ஐ சேர்ந்த கிறிஸ்டோபர் பிரவுன்(22) என்பவரையும், மான்ஹாட்டனைச் சேர்ந்த மாத்யூ மஹ்ரர்(22) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரவுன் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் சமீபத்தில் நியூயார்க் சென்று துப்பாக்கியை வாங்க ஆர்வமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி இதற்கிடையில், கைது … Read more

உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.25 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.19 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ-20: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பின்போது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! பரபரப்பு காட்சிகள்

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பின்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் அணிவகுப்பு  வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வாகனத்தின் பின்புறம் இணைக்கப்பட்ட மிதவை பகுதியில் நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் சில ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவர். அணிவகுப்பின்போது குறித்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிறுமி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் குறித்த … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,625,412 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,625,412 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 642,830,185 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 621,986,263 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,078 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா!

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. கால்பந்து திருவிழா  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இம்முறை கத்தாரில் நடக்கிறது. மொத்தம் எட்டு மைதானங்களில் நடக்கும் போட்டிகளில், 8 குழுக்களில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள 32 நாடுகள் மோதுகின்றன. இன்று Al Bayt மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில், தொடரை நடத்தும் கத்தார் அணியும், ஈகுவடார் அணியும் மோதுகின்றன. அணிகளின் அட்டவணை: குழு A: கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து … Read more

கனடா, சுவிட்சர்லாந்து மக்களுக்காக..ஜனாதிபதி இக்னேசியோவை சந்தித்த ட்ரூடோ

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னேசியோவை சந்தித்தது குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். துனிசியா சந்திப்பு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு இடையில் கடன் நிவாரணம், இடம்பெயர்வு, எரிசக்தி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க துனிசிய தீவில் பல நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடினர். இதில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னேசியோ கேஸ்சிஸ் இருவரும் விவாதித்தனர். … Read more

உக்ரைனில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் தீவிர ஆலோசனை

பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக் உக்ரைன் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யை  தலைநகர் கீவ்வில் சனிக்கிழமையான இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன்-பிரித்தானியா நட்பு உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை அறிவித்ததில் இருந்து உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா இருந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனிய தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய உச்சக்கட்ட பதற்ற நிலையில் கூட, அப்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உக்ரைனுக்கான பிரித்தானியாவின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினார்.  … Read more

வெள்ளை மாளிகையில் வெகு விமர்சையாக நடந்த ஜோ பைடன் பேத்தியின் திருமணம்!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி திருமணம் இன்று நடந்தது. நான்கு ஆண்டு காதல்  ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடனும், பீட்டர் நீல் என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நவோமி – நீல் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. @AP அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவரின் பேத்தி திருமணம் வெள்ளை … Read more