சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட முக்கிய தகவல்

மத்திய லண்டனில் ஆடம்பர ஊர்வலத்துடன் மூன்று நாட்கள் கொண்டாட இருப்பதாக மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா தொடர்பில் பகிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஏற்பாடுகள் தொடர்பில் முதல் முறையாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் பிரபலமான பாடகர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இசை விழாவும், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் வகையில் தெருக்களில் விருந்துகள் ஏற்பாடு செய்யவும் அரண்மனை முடிவு செய்துள்ளது. Credit: Times Newspapers Ltd ராஜ … Read more

பிபிசி ஆவணப்படம் நீக்கம் – எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: பிபிசி ஆவணப்படம் நீக்க உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின்போது, அம்மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா : மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை கடந்த செவ்வாய்க்கிழமை பிபிசி நிறுவனம் லண்டனில் … Read more

இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் குஜராத்துக்கு திடீர் பயணம்

சென்னை: இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் குஜராத்துக்கு திடீர் பயணம் மேல்கொள்கிறார். அகமதாபாத்தில் நடக்கும் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார ராசி பலன் 22-01-2023 முதல் 28-01-2023 | Vaara Rasi Palan | Astrology | Weekly Astro Predictions

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (அமெரிக்கா) கிரிக்கெட்டை சேர்க்க முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்கு ஒலிம்பிக் போட்டியின் அமைப்பு குழுவிடம் ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுமா? என்பது குறித்து வருகிற அக்டோபர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்திற்கு தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை: அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ திட்டத்திற்கு திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் மொத்தம் ரூ. 1.25 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, அப்துல் சமது, சின்னப்பா, பூமிநாதன், \சதன் திருமலைகுமார், ரகுராமன் ஆகியோரும் ஒருமாத ஊதியத்தை வழங்கினர்.

சொத்து வாங்கித் தருவதாகக் கூறி உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி! – முன்னாள் மேலாளருக்கு போலீஸ் வலை

பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் தங்களது கணக்குகளை பார்த்துக்கொள்ள தனியாக மேனேஜர் வைத்துக்கொள்வது வழக்கம். அந்த வகையில், கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தனது சொத்துகள், ஃபைனான்ஸ் மற்றும் கணக்குகளைப் பார்த்துக்கொள்ள நாக்பூரைச் சேர்ந்த சைலேஷ் தத்தா என்பவரை தனது மேலாளராக நியமித்திருந்தார். உமேஷ் யாதவ் கிரிக்கெட்டில் அதிக நேரத்தை செலவிட்டதால் இந்தப் பணியை தன்னுடைய நண்பரான சைலேஷ் தத்தாவை நம்பி ஒப்படைத்தார். ஆனால் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இந்தப் பணியை உமேஷ் … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் FBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 13 மணி நேர சோதனைக்குப் பின், அவர் வீட்டில் இருந்து ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவர் துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்கள் பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. முப்படை, தேசிய மாணவர் படை, ஒன்றிய தொழிற் பாதுகாப்பு படை, காவல், தீயணைப்புத்துறையினர் ஒத்திகைசெய்தனர். அணிவகுப்பு ஒத்திகை, குடியரசு தின விழா காரணமாக இன்று. 24,26-ம் தேதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ பணியால் இந்தாண்டு காந்தி சிலைக்கு பதில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுகிறது.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

புதுடெல்லி, டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப்பணிகள் முடிந்து தயாராகி விட்டது. வருகிற 31-ந்தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இந்த ஜனாதிபதி உரை பழைய கட்டிடத்தில்தான் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு ஜனாதிபதி, தற்போதுள்ள … Read more