தலைப்பு செய்திகள்
“நீங்கள் இந்தியாவிடம் சரணடைந்தது போல அவமானப்பட நேரிடும்" – பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான்!
ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான தாலிபன்கள் மீண்டும் அந்த நாட்டை கைப்பற்றினர். அப்போது அவர்களுக்கு முதன் முதலில் ஆதரவு தெரிவித்தது பாகிஸ்தான். அதன் பிறகே மற்ற நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கத் தொடங்கினர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் காபுல் சென்றிருந்தார். ஆனால், இன்னொரு பக்கம் தாலிபன்கள் பாகிஸ்தானையும் தங்கள் வசமாக்குவதற்காக தெஹ்ரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban) எனும் குழுவை அமைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர் … Read more
வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை! 22 வயதில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ்ப்பெண்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையை சேர்ந்த இளம்பெண் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி ஹரிஷ் (17) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வருகின்றனர். ஷோபனாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் … Read more
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள்! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் 50ஆண்டுகால கம்யூனிசிஸ்டு ஆட்சிக்கு முடிவுரை எழுதியவர். கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக மாநில முதல்வராக இருந்து வருகிறார். அவருக்கு இன்று (ஜனவரி 5ந்தேதி) பிறந்தநாள். இதையொட்டி, அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் … Read more
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம்
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் எலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில் 22 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் மூலம் பணமோசடி! சிக்காமல் தப்பிப்பது எப்படி?
‘எனக்கு எண்ட்கார்டே இல்லை’ என்பதுபோல் நாள்தோறும் புது புது மோசடிகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. இப்படி மோசடிகள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம்? காலம் முன்புபோல் இல்லை, இப்போது மோசடி நபர்கள் பெருகிவிட்டர்கள் என்பதுதானே உங்கள் கூற்று. ஆனால் உண்மையில் நமது அலட்சியமும், அஜாக்கிரதையும்தான் காரணம் என்பதை நாம் உணர மறந்துவிட்டோம். டிக்கெட் உறுதியாகிவிட்டதா? அடுத்தவரின் பான் எண் கொடுத்து ஆன்லைன் கடன் மோசடி; உங்கள் சிபில் ஸ்கோருக்கும் பாதிப்பா? மும்பையில் ஒரு பெண்மணி IRCTC வலைதளத்தில் ரயில் … Read more
இளவரசர் ஹரியை தனியறையில் நையப்புடைத்த சகோதரர் வில்லியம்: காரணம் மேகன் மெர்க்கல்
மேகன் மெர்க்கல் தொடர்பான தீவிர விவாதத்தின் போது தம்மை சகோதரர் வில்லியம் தாக்கியதாகவும், கழுத்தைப் பிடித்து தரையில் தள்ளியதாகவும் இளவரசர் ஹரி தமது புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். காயப்படுத்திய வில்லியம் பிரித்தானிய இளவரசர் ஹரி தமது வாழ்க்கை குறிப்புகளை Spare என்ற புத்தகத்தினூடாக வெளியிடவிருக்கிறார். இந்த புத்தகத்திலேயே தமது சகோதரர் வில்லியம் தம்மை உடல் ரீதியாக காயப்படுத்தியது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார் ஹரி. @getty 2019ல் லண்டனில் உள்ள மாளிகையில் இச்சம்பவம் நடந்துள்ளது. சகோதரர்கள் இருவரும் மேகன் மெர்க்கல் தொடர்பில் காரசாரமாக … Read more
திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து…
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று பிறந்தநாள். நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். துணை பொது செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் கனிமொழியின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட செயல்களை செய்து தங்கள் பலத்தை காட்ட … Read more
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான கேலரி அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான கேலரி அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. கேலரிகள், கம்பி வலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.39.80 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் ஜனவரி 10-க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் உத்தரவிட்டுள்ளது.