டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம்

தென்னாப்பிரிக்கா: டிவிட்டரை வாங்க எலான் மாஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க்கிற்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் ஒப்பந்தப்படி டிவிட்டரை வாங்கிக் கொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க் அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டர் பங்குகள் இருபது சதவிகிதம் அதிகரித்து 52 டாலராக உயர்ந்துள்ளது.

மெரினாவில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த நபரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த கோயம்பேட்டை சேர்ந்த அகில் வர்கீஸ் பால் என்பவரை பீர் பாட்டிலால் தாக்கி மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளனர். தலையில் படுகாயம் அடைந்த வர்கீஸ் பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி – சசி தரூர்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் … Read more

குமரி: காதலிப்பதாக ஏமாற்றி சிறார்வதைக்கு ஆளாக்கப்பட்ட 2 சிறுமிகள்… சக மாணவன், டெம்போ டிரைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவரும் படித்து வருகிறார். மாணவியும், மாணவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். இரண்டு நாளில் வீட்டிற்கு திரும்பிய மாணவியிடம் எங்கு சென்றாய் என … Read more

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க வெற்றி

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழந்துவிட்டபோதிலும் கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அக்-05: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அக்டோபர் 05: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 137-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 137-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.52 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 60.42 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் அச்சுறுத்தல்களை நிரந்தரமாக… செயலிழக்க செய்வோம்!| Dinamalar

புதுடில்லி :”எதிரிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க வலுவான ராணுவமும், தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. அந்த தடுப்பு நடவடிக்கை தோல்வி அடையும் போது, அந்த அச்சுறுத்தல்களை நிரந்தரமாக செயல் இழக்கச் செய்வது மட்டுமே ஒரே வழி. அதை நம் படையினர் துடிப்புடன் செய்து வருகின்றனர்,” என, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.நம் விமானப்படை தினம் வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாளைய போர்க்களங்களில் மிகப்பெரிய … Read more

11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ‘நாடு முழுதும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கண் வங்கிகள் செயல்படவில்லை’ என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர், நாட்டில் உள்ள கண் வங்கிகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்: நாடு முழுதும், 320 கண் வங்கிகள் … Read more