சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் லலிதா அறிவிப்பு

சீர்காழி: சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். மயிலாடுதுறை, குத்தலாம் வட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

“பள்ளி வகுப்பறைகளுக்குக் காவி நிறம் அடிப்பதில் என்ன தவறு; மூவர்ணக்கொடியில் கூடத்தான்..!" – பசவராஜ்

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் ‘விவேகா’ திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 7,601 பள்ளி வகுப்பறைகள் கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்திருக்கிறது. மேலும், இந்த ‘விவேகா’ திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளுக்கு, காவி நிற பெயின்ட் அடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசுவதா என்று சில கேள்விகளும் எழுந்தன. விவேகானந்தர் இந்த நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசுவதை ஆதரித்து, … Read more

கெர்சனில் ரஷ்ய படைகளின் காட்டுமிராண்டித்தனம்: ஜென்லென்ஸ்கியை கண்டதும் ஆனந்த கண்ணீரில் பொதுமக்கள்!

ரஷ்யாவின் மிக கொடூரமான காட்டுமிராண்டிதனத்தால் கெர்சன் நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் அரங்கேறி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். கெர்சனில் போர் அத்துமீறல் உக்ரைனில் உள்ள போர் புலனாய்வாளர்கள் கெர்சனில் மட்டும் 400க்கும் அதிகமான ரஷ்ய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கெர்சனில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களுடன் சேர்த்து பொதுமக்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். SKY NEWS அத்துடன் ரஷ்யா ராணுவம் நமது நாட்டிற்குள் நுழைந்து … Read more

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் … Read more

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்: முதல்வர் உத்தரவு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள்  ரூ.1,000 நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; பள்ளிகளுக்கு புது உத்தரவு

லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், பிரயாக்ராஜ் நகரில், ஒரு பள்ளி கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இதுபற்றி பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் … Read more

ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு வந்த கிராமம்! நீங்க வாங்கத் தயாரா?

நம்மில் பலர் வீடு வாங்க வேண்டும் என கனவு கண்டிருப்போம் ஆனால் ஒரு கிராமமே வாங்க வேண்டும் என கனவு கண்டிருப்போமா? ஸ்பெயின் நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசிக்காத ஒரு கிராமம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கிராமத்தின் மதிப்பு 2,27,000 யூரோ என்று சொல்கின்றனர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,16,87,873  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சால்டோ டி காஸ்ட்ரோ (Salto de castro) சிறுவர் தின சிறப்பு கட்டுரை..! பணத்தைக் கையாளும் கலை… … Read more

நளினி, முருகன் உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலையை எதிர்த்து மனு தாக்கல்: காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர்

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என நாராயணசாமி கூறியுள்ளார். ஆறு பேரும் விடுதலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயர்ஸ், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்தனர். இந்த நிலையில் ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர்கள் விடுதலையானார்கள். இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலையை … Read more

தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி தகவல் பலகை!

சென்னை: தலைமைச்செயலகத்தில் பார்வையற்றோர் வசதிக்காக படிக்கட்டு உள்பட முக்கிய இடங்களில் பிரெய்லி முறையிலான தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பார்வையற்றோர் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். பார்வையற்றோரும் திருக்குறள் மற்றும்,  நன்னூல், தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. … Read more

சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது: நளினி பேட்டி

திருச்சி: சிறப்பு முகாம் சிறை போலவே உள்ளது என நளினி தெரிவித்துள்ளார். கணவர் முருகன் மகளுடன் இருக்க விரும்புகிறார். மகள் லண்டனில் உள்ளார், அவருடன் இருக்க விரும்புகிறோம். கணவரை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். சாந்தன் இலங்கை போவதாக தெரிவித்துள்ளார்.