திருவண்ணாமலையில் தேரோட்டம் தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயில் தேரோட்டம் இன்று காலையில் தொடங்கியது. காலை முதல் இரவு வரை இந்த தேரோட்டம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் தேரோட்டம் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்து வருகிறது. இந்த தீபத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே இருக்கும் … Read more

எலான் மஸ்க் உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு மேற்கொண்டார். ட்விட்டர் வெளிப்படை தன்மையுடன் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என எலானிடம் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.

“மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடன் வழங்க இலக்கு” – அமைச்சர் பெரியகருப்பன்

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த மகளிருக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.21,500 கோடி கடன் வழங்கப்பட்டது. அதேபோல நடப்பு ஆண்டும் இலக்கை விஞ்சி கடன் வழங்கப்படும். முந்தைய திமுக ஆட்சியின்போது துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் … Read more

உலகளவில் 64.90 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.43 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.64 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி, சோழவரம் ஏரி, கண்ணன் கோட்டை ஏரியின் நீரின் அளவு நிலவரம்

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 93 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 56 கனஅடியாக இருந்த நீர்வரத்து  46 கனஅடியாக சரிந்துள்ளது. கண்ணன் கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 3 கனஅடியாக உள்ளது.

சுரங்கத்தில் மண்ணில் புதைந்து 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி| Dinamalar

சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் மண் சரிந்ததில் ஆறு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ஏழு பேர் நேற்று மண்ணில் புதைந்து பலியாகினர். சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு பஸ்தார் மாவட்டத்தில் மால்காவோன் கிராமத்தில் உள்ள ஒரு சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு சில பெண்கள் மண்ணை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்ததில் அனைவரும் குழியில் விழுந்து புதைந்தனர். தகவலறிந்து … Read more

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர் நலன், விளையாட்டு வளச்சித்துறை கூடுதல் தலைமை செயலராக அதுல்ய மிஸ்ரா, வீடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் அபூர்வா, டெல்லி தமிழ்நாடு இல்ல முதன்மைச் செயலராக ஹிதேஷ்குமார் மக்வானா, சமூக நலம் மற்றும் பெண்கள் நல வாரிய செயலராக ஜதாக் சமூக சீர்திருத்த துறை செயலராக டி.ஆபிரஹாம்,  தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக ஆர்.செல்வராஜ், நகராட்சி … Read more

வட கொரிய குழந்தைகளுக்கு இனி “துப்பாக்கி, வெடிகுண்டு” என்றே பெயர் இருக்க வேண்டும்: கிம் ஜாங் உன் உத்தரவு

வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு மென்மையான பெயர்களை வைப்பதற்கு பதிலாக இனி “வெடிகுண்டு” “துப்பாக்கி” போன்ற தேசபக்தி பெயர்களை வைக்குமாறு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். தேசபக்தி பெயர்கள் வட கொரியா அணு சக்தி சோதனை மற்றும் ஏராளமான ஏவுகணை பரிசோதனை ஆகியவற்றை நடத்தி  உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தற்போதைய புதிய உத்தரவால் சொந்த நாட்டு மக்களே அதிர்ச்சி அடைந்து உள்ளனர். kim-jong-un & … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,643,871 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,643,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 649,005,835 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 626,448,940 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,002 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.