2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலை நாளை ஆலோசனை
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.