உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! அந்த இடம் யாருக்கு?

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். பெர்னார்ட் அர்னால்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதன்படி முதலிடத்தை பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு $188.6 பில்லியன் எனவும், எலான் மஸ்க் சொத்து மதிப்பு $176.8 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Getty images  புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் அதே போல புளூம்பெர்க் பில்லியனர்ஸ் … Read more

இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன்! அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேட்டி…

சென்னை: இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக  பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சரான பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி இவ்வாறு கூறினார். தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக  இன்று பதவியேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து உதயநிதிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயிநிதிக்கு அனைத்து கட்சி தலைவர்கள், எம்பிக்கள், … Read more

திருச்சி காந்தி சந்தையில் விலை சரிவால் தேக்கமடைந்த செவ்வந்திப் பூ: காவிரி ஆற்றில் வீசினர்

திருச்சி: திருச்சி காந்தி சந்தையில் விலை சரிவால் தேக்கமடைந்த செவ்வந்திப் பூக்களை வியாபாரிகள் ஆற்றில் கொட்டினர். மழை காரணமாக செவ்வந்திப்பூக்கள் ரூ.10க்கு விற்பனை ஆவதால் காவிரி ஆற்றில் பூக்களை வீசியுள்ளனர். 

கடனை அடைக்க தன் சிறுநீரகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற மாணவி… ரூ.16 லட்சத்தை இழந்த சோகம்!

ஐதராபாத்தில் நர்சிங் கோர்ஸ் படித்து வருபவர் சுனந்தா ராவ். இவரின் சொந்த ஊர் குண்டூர். இவர் தன் கடனை அடைப்பதற்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் ஆன்லைனில் அடிக்கடி தேடுதலில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு ஆன்லைனில் பிரவீன் ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பிரவீன் சுனந்தாவின் சிறுநீரகத்தை ரூ.3 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார். இதனால் அவரிடம் ரூ.16 லட்சத்தை சுனந்தா இழந்திருக்கிறார். இது குறித்து அந்தப் பெண் போலீஸில் கொடுத்திருக்கும் புகாரில், … Read more

‘உதயத்தை வரவேற்போம்’: அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி மரியாதை செய்வதற்காக அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்..!

‘சென்னை: தமிழக  அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தனது தாத்தா கருணாநிதியின் சமாதியில் மரியாதை செய்வதற்காக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால், ‘உதயத்தை வரவேற்போம்’ என அலங்கரிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில்,  35அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பதவி ஏற்றதும், அவர் தனது தாத்தாவும், முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மெரினா நினைவிடத்தில் மரியாதை செய்ய உள்ளார். இதையடுத்த, அவருது நினைவிடம்,  உதயநிதியை  … Read more

மும்பை பங்குசந்தை குறியிட்டு எண் சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்ந்து 62,811 புள்ளிகளில் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 277 புள்ளிகள் சரிந்து 62,811 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்ந்து 18,687.புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சக மாணவர்கள் தாக்கியதில் 2ம் வகுப்பு மாணவன் பலி| Dinamalar

பிரோசாபாத் :உத்தர பிரதேசத்தில், துவக்கப் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதில், சக மாணவன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஷிகோஹாபாத் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில், நேற்று முன்தினம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஷிவம், ௭, என்ற மாணவனின் நெஞ்சில் ஏறி, சில மாணவர்கள் குதித்துள்ளனர். இதில், அம்மாணவன் மயக்கம் அடைந்து கீழே … Read more

இந்தியா Vs சீனா: எல்லையில் மோதிக்கொண்ட ராணுவ வீரர்கள்; விஷயத்தை மறைத்ததா பாஜக அரசு?! | என்ன நடந்தது?

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலை மத்திய பா.ஜ.க அரசு மறைத்து விட்டதாகம், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துக்கூட நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தியா – சீனா இந்தியா – சீனா மோதல்: கடந்த டிசம்பர் 9-ம் தேதியன்று அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதிக்கு அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) தாண்டி சீன ராணுவத்தினர் … Read more

6 மனைவிகள் மூலம் 54 குழந்தைகளுக்கு தந்தையான நபர் மரணம்! நிராசையான 100 குழந்தைகள் கனவு

பாகிஸ்தானை சேர்ந்த 54 குழந்தைகளுக்கு தந்தையான நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 54 குழந்தைகளின் தந்தை பலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத் மெங்கல் (75). இவர் கடந்த 2017ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய சமயத்தில் உலகளவில் வைரலானார். இதற்கு காரணம் மஜீத்துக்கு ஆறு மனைவிகள் மூலம் 54 குழந்தைகள் பிறந்தது தான். அப்போது அளித்திருந்த பேட்டியில் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாக ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். twitter 12 குழந்தைகள் பட்டினியால் உயிரிழப்பு மஜீத்தின் இரண்டு மனைவிகள் … Read more

சோழவரம் ஏரியின் நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிவு

திருவள்ளூர்: சோழவரம் ஏரிக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 200 கனஅடியாக சரிந்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 813 மில்லியன் கனஅடியாக உள்ளது.