அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக ரூ. 240 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் காட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.